YOGA to weight Loss: உடல் எடையை குறைக்கும் 6 யோகாசனங்கள்
பரிவர்தா உத்கடசனம்: பரிவர்தா உத்கடசனா என்ற இந்த யோகாசனம் சற்று சிரமமானது, பழகிவிட்டால் சரியாகிவிடும். இந்த ஆசனத்தை வயிற்று தசைகள் இறுகும். நிணநீர் (lymphatic) மற்றும் செரிமான அமைப்புகளும் மேம்படுத்தப்படுகின்றன. இது எடை இழப்புக்கான ஒரு சிறந்த முறை.
சூர்ய நமஸ்காரம்: ஆராய்ச்சிகளின்படி, ஒரு சுற்று சூரிய நமஸ்காரம் செய்தால் சுமார் 13.90 கலோரிகள் செலவாகிறது. 12 முறை சூரிய நமஸ்காரம் செய்வது பரிந்துரைக்கப்பட்ட எண்ணிக்கையாகும். நிச்சயமாக, மெதுவாகத் தொடங்கி 12 சூரிய நமஸ்காரம் செய்யலாம்.
திரிகோனாசனா: இந்த ஆசனத்தின் போது உடலில் ஏற்படும் முறுக்கு இயக்கம் செரிமானத்திற்கு உதவுகிறது. இது, தொப்பை மற்றும் கொழுப்பு படிவுகளை குறைக்கிறது. இந்த யோகாசனம் கால்களிலும் கைகளிலும் உள்ள தசைகளைச் வலுப்படுத்துகிறது.
தனுராசனம்: இந்த ஆசனம் தொப்பை கொழுப்பு மற்றும் இடுப்பு கொழுப்பையும் குறைக்க உதவுகிறது. தட்டையான வயிற்றைப்பெற சிறந்த ஆசனம் தனுராசனம் று நிறமாக இருக்கும். இது முதுகு, தொடைகள், கைகள் மற்றும் மார்பை ஒரு அற்புதமான நீட்டிப்பையும் தருகிறது.
அதோ முக ஸ்வனாசனா குறிப்பிட்ட தசைக் குழுக்களை மையமாகக் கொண்டு முழு உடலிலும் தாக்கத்தை ஏற்படுத்துகிறது. கை, தொடை, தொடை எலும்பு மற்றும் முதுகுப் பகுதிகளை வலிமையாக்குகிறது. ரத்த ஓட்டத்தை மேம்படுத்துகிறது
சேது பந்த சர்வங்கசனம்: வயிற்று கொழுப்பைக் குறைக்க சேது பந்த சர்வங்கசனம் உதவும். ரத்த ஓட்டம் மேம்படுவதற்கும், செரிமானம் சேது சீராவதற்கும் இந்த ஆசனம் உதவி செய்யும்…