விராட் கோலியின் உடற்பயிற்சி மற்றும் உணவு கட்டுப்பாடு... A to Z இதோ!
விராட் கோலி முழுமையாக சைவ உணவை மட்டுமே சாப்பிடக்கூடியவர்.
விராட் கோலி எடை தூக்குதல் மற்றும் கார்டியோ உடற்பயிற்சிகளை சரிசமமாக செய்பவர். இதனால்தான், உடலை ஒல்லியாகவும், தசைகள் ஆரோக்கியமாகவும் உள்ளன.
விராட் கோலி தனது 24 வயதில்தான் இந்த உணவு கட்டுப்பாட்டையும், ஃபிட்னஸையும் சீரியஸாக செய்ய முடிவு செய்துள்ளார்.
விராட் கோலி பள்ளியில் கிரிக்கெட் விளையாடுவதற்கு முன்னரே, கால்பந்து, பேட்மிண்டன், கூடைப்பந்து ஆகிய விளையாட்டுகளை விளையாடியுள்ளார்
ஒருவேளை தான் கிரிக்கெட் வீரராக ஆகாயிருக்காவிட்டால், கால்பந்து வீரராகவோ அல்லது பேட்மிண்டன் வீரராகவோதான் ஆகியிருப்பேன் என முன்னர் கூறியுள்ளார்.
விராட் கோலி தனக்கு பிடிக்கவே பிடிக்காது உணவு என்று பாகற்காயை குறிப்பிட்டுள்ளார்.
தனக்கு வீட்டில் செய்யப்படும் சாதம் மற்றும் ராஜ்மாதான் மிக மிக பிடித்த உணவு எனவும் கோலி கூறியுள்ளார்