ஒரு ஒலிம்பிக் போட்டியை நடத்துவதற்கு எவ்வளவு செலவாகும் என்று தெரியுமா?

Wed, 07 Aug 2024-12:43 pm,

2024 கோடை ஒலிம்பி போட்டிகள் தற்போது பாரிஸ் நகரில் நடைபெற்று வருகிறது. மிகப்பெரிய பாதுகாப்புகளுக்கு மத்தியில் ஒலிம்பிக் போட்டிகள் நடைபெற்று வருகிறது.

 

எப்பொழுதும் ஒலிம்பிக் போட்டிகளை நடத்த திட்டமிடும் பட்ஜெட்களை விட, நடத்தி முடிக்கும் போது அந்த ஹோஸ்ட் நாடுகளுக்கு ஏற்படும் செலவு பல மடங்கு அதிகமாகிறது.

 

பாரிஸ் நகரில் ஒலிம்பிக் போட்டிகள் நடத்துவதற்கு நகர்ப்புற மற்றும் போக்குவரத்து உள்கட்டமைப்பில் முதலீடுகளைத் தவிர்த்து கிட்டத்தட்ட $8.7 பில்லியன் செலவு ஆகி உள்ளது.

 

இது 1992ல் ஒலிம்பிக் போட்டிகளை நடத்துவதற்கு ஏற்பட்ட செலவை விட 266 சதவிகிதம் ஆகும். குளிர்கால விளையாட்டுகள் எதிர்பார்த்ததை விட அதிக செலவாகும். எடுத்துக்காட்டாக 2014ல் ரஷ்ய நகரம் சோச்சியில் நடைபெற்ற ஒலிம்பிக் போட்டியில் திட்டமிடப்பட்ட செலவை விட 289 சதவீதம் அதிகமாக இருந்தது (28.9 பில்லியன்) 

 

ஒரு நகரம் ஒலிம்பிக் போன்ற ஒரு பெரிய நிகழ்வை நடத்தினால், அது நகரத்தை சிறப்பாக்க உதவும் என்று நினைத்து நடத்தப்படுகிறது. ஆனால் சில சமயங்களில் நிகழ்வு முடிந்ததும், எதிர்காலத்தை சரியாகத் திட்டமிடாததால் அவை பயன்படுத்தப்படாமல் பல கட்டிடங்களுடன் கைவிடப்படுகிறது.

 

கடந்த காலங்களில் ஒலிம்பிக் போட்டிகளை நடத்திய நகரங்களான சரஜேவோ, ஏதென்ஸ், பெய்ஜிங் மற்றும் ரியோ போன்றவை தற்போது அழிக்கப்பட்டுவிட்டன. சிறந்த விளையாட்டு நடைபெற்ற இடம் என்று அறியப்படாமல், அவை நிதி சிக்கல்கள் மற்றும் தவறுகளின் நினைவூட்டும் இடமாக பார்க்கப்படுகின்றன. விளையாட்டுப் போட்டிகளை நடத்திய பிறகுதான் நிதி விளைவுகள் மோசமாக இருக்கும் என்பதை மற்ற நகரங்கள் அறிந்து கொண்டன.

ZEENEWS TRENDING STORIES

By continuing to use the site, you agree to the use of cookies. You can find out more by Tapping this link