வயது வாரியாக யார் எவ்வளவு தண்ணீர் குடிக்க வேண்டும் தெரியுமா?
1-3 வயது குழந்தைகள் தினமும் 4-5 கப் அல்லது 800-1000 மில்லி தண்ணீர் குடிக்க வேண்டும் என்று உணவியல் நிபுணர் ஷிகா குமாரி தனது இன்ஸ்டாகிராம் பதிவில் கூறியுள்ளார்.
4 முதல் 8 வயது வரை உள்ள குழந்தைகள் தினமும் 1200 மில்லி அல்லது 5 கப் தண்ணீர் குடிக்க வேண்டும். இதில் திரவ உணவும் அடங்கும்.
9-13 வயதுடைய குழந்தைகள் தினமும் 7 முதல் 8 கப் அல்லது 1600-1900 மில்லி தண்ணீரை உட்கொள்ள வேண்டும்.
14 முதல் 18 வயதுடைய இளம் பருவத்தினர் தினமும் 1900 முதல் 2600 மில்லி அதாவது 8-11 கப் தண்ணீர் குடிக்க வேண்டும்.
19 வயது முதல் 64 வயது வரை உள்ளவர்கள் தினமும் 8-11 கப் அதாவது 2000 முதல் 3000 மிலி தண்ணீர் குடிக்க வேண்டும். இருப்பினும், தண்ணீரின் தேவை, நபரின் தேவை, எடை மற்றும் காலநிலை போன்ற காரணிகளைப் பொறுத்தது.
65 வயது அல்லது அதற்கு மேற்பட்டவர்கள் தினமும் 8-11 கப் அல்லது 2000 முதல் 3000 மில்லி தண்ணீர் குடிக்க வேண்டும். முதுமையில் நீரிழப்பு அபாயம் அதிகரிக்கக்கூடும் என்பதால், ஒரு வயதானவர்கள் எப்போதும் போதுமான அளவு தண்ணீரை உட்கொள்ள வேண்டும்.