Ousted leaders: ஆட்சிக்கவிழ்ப்பு சதிக்கு ஆளான சர்வதேச தலைவர்கள்

Tue, 15 Jun 2021-9:45 pm,

மியான்மர் நாட்டில் பதவி நீக்கம் செய்யப்பட்ட ஜனநாயகத் தலைவர் ஆங் சாங் சூகி மீதான தேசத் துரோகம் மற்றும் பிற குற்றச்சாட்டுகள் தொடர்பான வழக்கு தொடங்கியது. நான்கு மாதங்களுக்கு முன்னர் அவரது ஆட்சி கவிழ்க்கப்பட்டு, தற்போது காவலில் வைக்கப்பட்டுள்ளார்.

(புகைப்படம்: ராய்ட்டர்ஸ்)

சூடானின் சர்வாதிகாரி ஒமர் அல்-பஷீரின் 30 ஆண்டு காலமாக ஆட்சி அதிகாரத்தை கையில் வைத்திருந்தார். 2019 ல் நடைபெற்ற ராணுவ புரட்சியில் அல் பஷீர் பதவி நீக்கம் செய்யப்பட்டார். உயர் பாதுகாப்பு சிறையில் அடைக்கப்பட்டிருக்கும் பஷீர் மீது, அதற்கு முன்பே பல ஊழல் குற்றச்சாட்டுகள் இருந்தன. 

குற்றம் நிரூபிக்கப்பட்டால், பஷீருக்கு மரண தண்டனை விதிக்கப்படலாம்  

(புகைப்படம்: AFP)

ஐவரி கோஸ்ட்டின் லாரன்ட் கபாகோ 2011இல் மிகப் பெரிய போராட்டங்களுக்குப் பின்னர் வெளியேற்றப்பட்டார், தேர்தல் தோல்வியை அவர் ஏற்க மறுத்ததால் தூண்டப்பட்டு, போராட்டங்கள் கிளர்ந்தன.

மனிதகுலத்திற்கு எதிரான குற்றங்கள் தொடர்பான விசாரணைக்காக ஹேக்கில் உள்ள ஐ.சி.சியில் வைக்கப்பட்டுள்ளார். 3,000 க்கும் மேற்பட்டோர் இறந்த வன்முறைகள் தொடர்பாக நீதிமன்றத்தில் விசாரணை செய்யப்பட்ட முதல் தலைவர் இவர் தான்.    

(புகைப்படம்: AFP)

அதிபர் தேர்தலில் தோல்வியடைந்த பின்னர் எக்குவடோரியல் கினியாவுக்கு தப்பி ஓடினார் யஹ்யா ஜம்மே. 22 ஆண்டுகள் காம்பியாவை தனது இரும்புக் கரத்தால் ஒடுக்கி வைத்து, 2017 வரை ஆட்சி செய்தார். அவர் நாட்டை விட்டு செல்ல மறுத்தால் அண்டை நாடுகளின் ராணுவத் தலையீடு இருக்கும் என்ற அச்சங்கள் எழுந்ததால் யஹ்யா ஜம்மே வெளியேறிவிட்டார்.  

அவரது ஆட்சியில் நடைபெற்ற முறைகேடுகளை விசாரிக்க ஆணையம் ஒன்று நிறுவப்பட்டுள்ளது. வழக்கு விசாரணையை எதிர்கொள்ள ஜம்மே காம்பியாவுக்கு திரும்ப வேண்டும்.

(புகைப்படம்: AFP)

2014 ஆம் ஆண்டில் ஐவரி கோஸ்ட்டுக்கு தப்பி ஓடினார் புர்கினா பாசோ தலைவர் பிளேஸ் காம்போர். 27 ஆண்டுகால அதிகாரத்தை நீட்டிப்பதற்கான முயற்சிகளை எடுத்த அவருக்கு எதிராக நாட்டில் கிளர்ச்சி வெடித்தது. இறுதியில் அவர் நாட்டைவிட்டு வெளியேறினார். அவரை கைது செய்வதற்கான வாரண்ட் 2016 இல் வெளியிடப்பட்டது.  1987இல், புரட்சிகர ஹீரோ தாமஸ் சங்கராவை கொலை செய்த குற்றச்சாட்டுகளை பிளேஸ் காம்போர் எதிர் கொண்டுள்ளார்.

(புகைப்படம்: AFP)

எகிப்தின் முதல் ஜனநாயக ரீதியாக தேர்ந்தெடுக்கப்பட்ட சிவில் அதிபர் மொஹமது மோர்சி 2012 ல் ஆட்சிக்கு வந்தார், ஆனால் ஒரு வருடம் கழித்து ராணுவம் மேற்கொண்ட நடவடிக்கைகளால் அவரது ஆட்சி கவிழ்ந்தது. 2019 ஆம் ஆண்டில் நீதிமன்ற விசாரணையின் போது, அங்கேயே விழுந்து இறந்தார். சிறைச்சாலையில் அவருக்கு செய்யப்பட்ட கொடுமைகளால் அவர் இறந்திருக்கலாம் என ஐ.நா நிபுணர்கள் கருதுகின்றனர்.

(புகைப்படம்: AFP)

Serbian exile - Thailand தாய்லாந்து நாட்டின் முன்னாள் பிரதமர் தாக்சின் ஷினாவத்ராவின் சகோதரியான யிங்லக் ஷினவத்ராவின் தேர்ந்தெடுக்கப்பட்ட அரசாங்கத்திற்கு எதிராக பல மாதங்களாக ஆர்ப்பாட்டங்கள் நடைபெற்றன. அதையடுத்து, 2014 இல் தாய்லாந்தின் ராணுவம் ஆட்சியை கைப்பற்றியது.

யிங்லக் சிறையில் அடைக்கப்பட்டார், ஆனால் 2017 ஆம் ஆண்டில், விலையுயர்ந்த அரிசி மானியத் திட்டத்தின் மீது அலட்சியம் காட்டியதற்காக அவருக்கு ஐந்தாண்டு சிறைத்தண்டனை விதிக்கப்பட்டது, அதற்கு சில வாரங்களுக்கு முன்பே அவர் நாட்டை விட்டு வெளியேறினார்.

2019 ஆம் ஆண்டில் யிங்லக் "செர்பிய நாட்டின் குடியுரிமையைப் பெற்றுவிட்டது" என்று செர்பிய பத்திரிகை அரசாங்க ஆவணம் ஒன்றை வெளியிட்டது.

(புகைப்படம்: ராய்ட்டர்ஸ்)

ZEENEWS TRENDING STORIES

By continuing to use the site, you agree to the use of cookies. You can find out more by Tapping this link