சூட்டைத் தணிக்க உதவும் அஞ்சறைப் பெட்டியில் இருக்கும் அற்புதங்கள்

Wed, 14 Jul 2021-3:39 pm,

கொத்தமல்லி விதைகள் செரிமானத்திற்கு உகந்தது. உடலை சுத்தப்படுத்துவதற்கும், கோடை காலத்தில் ஏற்படும் உடல் எரிச்சலைத் தடுப்பதற்கும் உதவுகின்றன. நமது சூட்டை தணித்து, உடல் வெப்பநிலையை குறைக்கும். கொத்தமல்லி விதைகளில் டயாபோரெடிக் (diaphoretic) பண்புகள் உள்ளன. காய்ச்சலாக இருக்கும்போதும் வரக்கொத்துமல்லியை பயன்படுத்தலாம். ஆக்ஸிஜனேற்றிகள் மற்றும் நார்ச்சத்து அதிகம் உள்ள இது, பித்த உற்பத்தியை அதிகரிப்பதன் மூலம் கல்லீரல் சிறப்பாக செயல்பட உதவுகிறது.

சீரகம் என்பதை சீர்+அகம், உள்ளுறுப்புகளை சீர் செய்யும் உணவுப் பொருள் என்று சொல்வார்கள். சீரகம் இந்திய உணவுகளில் பிரபலமான மசாலா ஆகும், மேலும் அவை ஏராளமான ஆரோக்கிய நன்மைகளை வழங்குகின்றன. உடலின் நச்சுத்தன்மையையும் வாயு மற்றும் அமிலத்தன்மை பிரச்சனைகளை தணிக்க உதவுகிறது. சீரகத்தை அப்படியே மென்று சாப்பிடலாம். பொடியாகவும் சாப்பிடலாம். மோர் மற்றும் எலுமிச்சை சோடா போன்ற கோடைகால குளிர்பானங்களில் சீரகப்பொடியை கலந்து குடிக்கலாம். வீக்கம் அல்லது அஜீரணம் இருப்பவர்களுக்கு சீரகம் ஒரு வரப்பிரசாதம்.

கட்டி, கொப்புளங்கள், போன்றவை ஏற்பட்டால், அவற்றை சரி செய்ய வெந்தயம் உதவும். குளிரூட்டியாக செயல்படும் வெந்தயம், உடல் வெப்பநிலையை குறைக்க உதவுகின்றன. வெந்தயத்தை தண்ணீரில் வேகவைத்து இரவு முழுவதும் அப்படியே வைத்து காலையில், அந்த தண்ணீரை வடிகட்டி குடிக்கலாம். வீக்கம் மற்றும் வயிற்றுப்போக்கு போன்ற இரைப்பை குடல் பிரச்சினைகளுக்கு வெந்தயம் மிகவும் ஏற்றது.

சோம்பு, இதில் வைட்டமின் சி அதிகமாக உள்ளது. , இது உடலில் வெப்பம் தொடர்பான அழற்சியைத் தடுக்க உதவுகிறது. நம் உடலில் ஏற்படும் வெப்பம் நெஞ்செரிச்சல் மற்றும் அஜீரணத்தை ஏற்படுத்தும், செரிமான ரசாயனங்களை அதிகரிக்கும் சோம்பு, உடலில் ஏற்படும் அமிலத்தன்மையைத் தடுத்து செரிமானத்தை ஒழுங்குபடுத்துகிறது.  

ZEENEWS TRENDING STORIES

By continuing to use the site, you agree to the use of cookies. You can find out more by Tapping this link