International Tea Day: சர்வதேச தேயிலை தினம் எதற்காக கொண்டாடப்படுகிறது தெரியுமா?
சர்வதேச தேயிலை தினமானது தேயிலை மற்றும் தேயிலை தொழிலில் பணிபுரிபவர்களுக்கு மரியாதை செலுத்தும் விதமாக ஒவ்வொரு ஆண்டும் கொண்டாடப்படுகிறது. தேயிலை தொழிலில் உள்ளவர்களின் கஷ்டங்கள் குறித்து விழிப்புணர்வை ஏற்படுத்த இந்த நாள் உருவாக்கப்பட்டது.
தொழிலாளர்களின் நலனை கருத்தில் கொண்டு உருவாக்கப்பட்ட இந்த நாள் மிகவும் முக்கியமானது மற்றும் ஒவ்வொருவரும் இதில் பங்கேற்க வேண்டும். சர்வதேச தேயிலை தினம் ஆனது முதலில் 2005ம் ஆண்டு கொண்டாடப்பட்டது.
ஆசியா மற்றும் ஆப்பிரிக்காவில் உள்ள தொழிற்சங்கங்கள், சிறு தேயிலை விவசாயிகள் மற்றும் சமூக அமைப்புகளால் இந்த நாள் தொடங்கப்பட்டது. தேயிலை தொழிலில் உள்ளவர்களின் ஊதியம் மற்றும் நியாயமான விலைகள் கிடைக்க இந்த நாள் நிறுவப்பட்டது.
சர்வதேச தேயிலை தினத்திற்கு உத்தியோகபூர்வ அந்தஸ்து எதுவும் இல்லை என்றாலும், தேயிலை உற்பத்தியாளர்கள் மற்றும் தொழிலாளர்களின் வேலை நிலைமைகள் பற்றிய விழிப்புணர்வை ஏற்படுத்த கொண்டாடப்பட்டு வருகிறது.
சர்வதேச தேயிலை தினம் ஆனது பல்லுயிர் பாதுகாப்பின் முக்கியத்துவத்தை நினைவூட்டுகிறது மற்றும் சுற்றுச்சூழல் நிலைத்தன்மையை மேம்படுத்துகிறது. இந்த சர்வதேச தேயிலை தினத்தை நண்பர்கள் மற்றும் குடும்பத்தினருடன் கொண்டாடலாம்.
இந்த சர்வதேச தேயிலை தினத்தில் நீங்கள் உலகில் உள்ள பல்வேறு வகையான டீயை குடித்து ருசி பெறலாம். நீங்கள் இதுவரை முயற்சி செய்யாத டீ வகைகளை இன்று முயற்சி செய்து பாருங்கள்.
உங்கள் நண்பர்களுடன் சேர்ந்து வெளியில் சென்று விதவிதமான டீ வகைகளை ருசித்து பார்க்கலாம். மேலும் அதனை சமூக ஊடகங்களில் பதிவிடுவதன் மூலம் இந்த நாளை கொண்டாடலாம்.