உலகின் மிக உயர்ந்த இடத்தில் அமையும் ரயில் பாலம் எது தெரியுமா?
இந்திய ரயில்வேயின் பொறியியல் அற்புதங்களில் ஒன்றாகும், இது இந்திய ரயில்வேயின் முதல் கேபிள் பாணியிலான பாலமாகும். இந்த பாலம், ஜம்மு-காஷ்மீரில் கத்ரா (Katra) நகரை ரியாசி (Reasi) உடன் இணைக்கும் என்று ரயில்வே அமைச்சகம் கூறுகிறது.
தூண்கள் அதிர்வுகளையும் தாங்கும் திறன் கொண்டவை. அஞ்சி காட் பாலத்தின் கான்கிரீட் தூண்கள் வெடிப்பைத் தாங்கும் வகையில் வடிவமைக்கப்பட்டுள்ளன, இதில் 1.2 மீட்டர் அகலமுள்ள மத்திய விளிம்பும் (central verge), 14 மீட்டர் அகலமுள்ள இரட்டை தண்டவாளங்களும் உண்டு.
பாலத்தின் மொத்த நீளம் 473.25 மீட்டர் ஆகும். இப்பகுதியின் சிக்கலான புவியியல் அமைப்பைக் கருத்தில் கொண்டு, ஒரு வளைவுப் பாலம் கட்டப்படுவது கிட்டத்தட்ட சாத்தியமற்றது என்றே கூறப்பட்டது. ஆனால், இது அசாத்தியத்தையும் சாத்தியமாக்கிக் காட்டியிருக்கிறது இந்தியன் ரயில்வே
வடக்கு ரயில்வேயின் உதம்பூர்-ஸ்ரீநகர்-பாரமுல்லா ரயில் இணைப்பு (Udhampur-Srinagar-Baramulla Rail Link (USBRL) இன் ஒரு பகுதியாகும், இது இமயமலை வழியாக செல்கிறது
ஒற்றை pylon இல் அமைக்கப்படும் இந்த பாலம், 96 கேபிள்களின் ஆதரவில் நிற்கும்.
ஜூலை மாதம், ரயில்வே அமைச்சர் பியூஷ் கோயல், USBRL திட்டம், லட்சிய ரயில்வே உள்கட்டமைப்பு திட்டம் என்றும், அது சிறந்த தொழில்நுட்பம் மற்றும் பொறியியல் அற்புதங்களுடன் கட்டப்பட்டு வருகிறது என்று கூறியிருந்தார்.