வெங்காய சாற்றை முடிக்கு தடவி வந்தால் முடி வளர்ச்சி அதிகரிக்குமா?
முடி உதிர்தல் பிரச்சனை பலருக்கும் மன உளைச்சலை உண்டாக்குகிறது. முடி வளர்ச்சியை அதிகரிக்க பலரும் இயற்கை தயாரிப்புகளை பயன்டுத்துகின்றனர். குறிப்பாக பலர் வெங்காய சாற்றை முடிக்கு பயன்படுத்துகின்றனர்.
இருப்பினும் வெங்காயச் சாறு முடி உதிர்வை குறைத்து, முடி வளர்ச்சி அதிகரிக்குமா? என்ற கேள்வி பலருக்கும் இருக்கும். இதில் உள்ள உண்மை தன்மையை தெரிந்து கொள்ள தொடர்ந்து படியுங்கள்.
வெங்காயச் சாற்றை தலையில் தடவுவதன் மூலம் இரத்த ஓட்டத்தை மேம்படுத்த முடியும். முடி வளர்ச்சிக்கு தேவையான பல ஊட்டச்சத்துக்கள் மற்றும் ஆக்ஸிஜனை பெற இது உதவுகிறது.
வெங்காயச் சாற்றில் அழற்சி எதிர்ப்பு பண்புகள் அதிகம் உள்ளது. இவை உச்சந்தலையை மென்மையாக்கி முடி வளர்ச்சியை அதிகரித்து, எரிச்சலை குறைக்க உதவுகிறது.
வெங்காய சாறு உச்சந்தலையில் இருக்கும் அழுக்கு மற்றும் பொடுகை நீக்க உதவுகிறது. மேலும் முடி உதிர்தல் பிரச்சனை குறைந்து, வலுவான முடி வளர்ச்சியை ஊக்குவிக்கிறது.
வெங்காய சாறு பெரும்பாலான மக்களுக்கு பாதுகாப்பானது என்றாலும், ஒரு சிலருக்கு குறிப்பாக உணர்திறன் வாய்ந்த சருமம் கொண்டவர்களுக்கு எரிச்சலை ஏற்படுத்தலாம்.