சாதம் சீக்கிரம் தண்ணீர் விட்டுவிடுகிறதா? இந்த ட்ரிக் மூலம் நீண்ட நேரம் நன்றாக இருக்கும்!
இந்த காலக்கட்டத்தில் பலரும் சந்திக்கும் பிரச்சனை காலையில் வைக்கும் சாதம், மதியம் தண்ணீர் விட்டு விடுகிறது. வெயில் அதிகம் இருக்கும் போது இது மிகவும் நிகழ்கிறது.
சிலர் காலையில் வைக்கும் அரிசியை தான் மூன்று வேளை சாப்பிடுவார்கள். நீங்கள் சமைக்கும் அரிசியில் தண்ணீர் அதிகம் இருந்தால், சாப்பிட கடினமாக இருக்கும். எனவே இங்கே கொடுக்கப்பட்டுள்ள ட்ரிக்ஸ் பயன்படுத்தினால், இரவு 10 மணிக்கு கூட சாப்பிட நன்றாக இருக்கும்.
நீங்கள் அரிசியை சமைக்கும்போது, ஒரு ஸ்பூன் தேங்காய் எண்ணெய் சேர்த்தால் அது அரிசியை கெட்டுப்போகாமல் வைத்திருக்க உதவுகிறது. ஒரு கப் அரிசிக்கும் ஒரு ஸ்பூன் எண்ணெய் போதும்.
நீங்கள் அரிசியை சமைக்கும் போது, பாத்திரத்தில் அல்லது ரைஸ் குக்கரில் என எதில் வைத்தாலும், அதில் ஒரு ஸ்பூன் நல்லெண்ணெய் சேர்த்தால் புதியதாகவும் சுவையாகவும் இருக்கும்.
அரிசியைக் வடித்த பிறகு, சுத்தமான வெள்ளைத் துணியில் அரிசியைப் போட்டு 30 நிமிடம் ஆற விடவும். பின்னர், அரிசியை ஒரு மூடி வைத்தால், நீண்ட நேரம் சூடாகவும் நன்றாக இருக்கும்.
சாதத்தை வடித்த பிறகு உடனே மூடி வைத்தால் தண்ணீர் விட்டுவிடும். எனவே, இதனை தடுக்க ஒரு பெரிய தட்டில் கொட்டி ஆறவிட்டு ஹாட் பாக்ஸில் வைத்து பயன்படுத்தலாம்.