அதிகம் மொபைல் பார்த்தால் மூளைக்கு ஆபத்தா?
இரவில் வெகு நேரம் விழித்திருந்து போன்/டிவி பார்ப்பவரா நீங்கள்? அப்போது இது உங்களுக்கான பதிவுதான். இது உடலுக்கு பல வகைகளில் தீங்கு விளைவிக்கும் என்பதை கவனத்தில் கொள்வது நல்லது. ஒரு சிலருக்கு தொலைக்காட்சி, மொபைலின் சத்தம் கேட்டுக்கொண்டே தூங்கும் பழக்கமும் இருக்கும். ஆனால், உறங்குவதற்கு முன்பு இது போன்ற ஆரோக்கியமற்ற செயலில் ஈடுபடுவது நல்லதா? முழு விவரத்தை இங்கு பார்க்கலாம்.
மாணவர்கள் அதிகமாக மொபைல் உபயோகிப்பது, அவர்களின் படிப்பை பாதிக்கும் என்பது மருத்துவர்கள் கூறி தெரிய வேண்டும் என்பது இல்லை. இதை அனைவருமே அறிவர். இதனால் இளம் தலைமுறையின் அறிவாற்றல் குறைவாகவும் பல வாய்ப்புகள் உள்ளது.
சமீபத்தில் நடத்தப்பட்ட ஒரு மருத்துவ ஆய்வில், மொபைலை அதிகம் உபயோகிக்கும் குழந்தைகளின் மூளை வளர்ச்சி மிகவும் மெதுவவாக இருக்கும் என கூறப்படுகிறது. சிறுவயதிலேயே மொபைலை உபயோகிப்பவர்கள், சமூகத்துடன் ஒட்டுதலை ஏற்படுத்துவதற்கு நாளாகும் என கூறப்படுகிறது.
மூளை, அதிக ஸ்க்ரீட் டைமால் எப்படி பாதிக்கப்படுகிறது தெரியுமா? நீங்கள் அதிகமாக மொபைலை உபயோகிக்கும் போது உங்கள் மூளை ஒரு நேரத்தில் பல விஷயங்களை யோசிக்க கூடும். குறிப்பாக பருவ வயதில் இருப்பவர்களின் மூளை, இதனால் கடுமையாக பாதிக்கப்படும் என ஒரு ஆய்வில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
அதிக போன் உபயோகத்தால் நமது மன நிலை அலைபாய்கிறது. இதனை ஆங்கிலத்தில் Mood Swings என்பர். அதிகம் மொபைல் உபயோகிப்பவர்கள், உபயோகிக்காதவர்களை வைத்து ஒரு ஆய்வு மேற்கொள்ளப்பட்டது. அதில், அதிகமாக மொபைல் பயன்பாட்டாளர்கள் மன அழுத்தத்திற்கு ஆளாவதாக கூறப்பட்டுள்ளது. அதிகம் மொபைல் உபயோகிக்கும் குழந்தைகள் முரட்டுத்தனமாக வளர்வதாகவும் கூறப்படுகிறது.
பல இளம் தலைமுறையினர், இன்சோம்னியா எனப்படும் தூக்கமின்மை நோயினால் அவதிப்பட்டு வருகின்றனர். இதற்கு முக்கிய காரணமாக இருப்பது, மொபைல். இதனால் பலரின் தூக்கம் கெட்டு அது மன அழுத்தத்திற்கு வழி வகுக்கிறது. தூக்கமும் தொலைந்து போகிறது.
உடலுக்கு தீங்கு விளைவிக்கும் அனைத்து பழக்க வழக்கங்களையும் விட்டொழிப்பது பின்னாளில் நமக்கு நன்மை பயக்கும். ஆகையால், சுய ஒழுக்கத்துடன் இரவு உறங்க செல்வதற்கு 2 மணி நேரத்திற்கு முன்பு போனை எடுத்து வைப்பது நல்லது.