Do not Donate: சனீஸ்வரருக்கு கோபம் ஏற்படுத்தும் தானங்கள்: இப்படி கொடுக்கவேண்டாம்
மத நூல்கள் அல்லது ஸ்தோத்திரங்களை படிக்க ஆர்வமில்லாதவர்களுக்கு ஒருபோதும் நன்கொடை அளிக்காதீர்கள். அவர்கள் இந்த புத்தகங்களை மதிக்காமல் அவமதிக்கிறார்கள். அவர்களகளால் ஏற்படுத்தப்பட்டத்திற்கு காரணகர்த்தாவாக இருப்பதால் நமக்குக்ம் பாவம் வந்து சேரும்.
அன்னதானம் அல்லது உணவு தானம் செய்வது மிகவும் அவசியமான ஒன்று. ஆனால் எஞ்சிய அல்லது பழைய உணவை ஒருவருக்குக் கொடுப்பது மிகவும் தவறானது. எஞ்சிய உணவை தானம் செய்வது தாயை அவமதிக்கும் செயல் என்று அன்னபூரணி அன்னை வருத்தப்படுவார்.
மாலையில் உப்பை யாருக்கும் கொடுக்கக்கூடாது. அதேபோல் தயிர் போன்ற புளிப்புப் பொருட்களையும் மாலையில் தானம் செய்யக்கூடாது.
மகாலட்சுமி சிலை அல்லது புகைப்படத்தை யாருக்கும் தானம் செய்யாதீர்கள். இதை செய்தால் உங்கள் வீட்டில் உள்ள லட்சுமி வேறு யாருக்காவது சென்று விடும். இது வறுமைக்கு வழிவகுக்கிறது. லட்சுமி-விநாயகர் இருக்குக்ம் நாணயங்களை யாருக்கும் தானமாக வழங்காதீர்கள்.
உடைந்த இரும்பு பாத்திரங்கள் அல்லது இரும்பு பொருட்களை யாருக்கும் தானமாக கொடுக்க வேண்டாம். உடைந்த பொருட்களை தானம் செய்வதால் சனீஸ்வரருக்கு கோபம் ஏற்படும்.
சனீஸ்வரரின் கோபமாக ஆளானால் பல பிரச்சனைகள் வந்து சேரும். எனவே உடைந்த பொருட்களை தருவதை தவிர்க்கவும்.
(குறிப்பு: இங்கு வழங்கப்பட்ட தகவல்கள் பொதுவான அனுமானங்கள் மற்றும் மத நம்பிக்கைகளை அடிப்படையாகக் கொண்டவை. ZEE NEWS இதை உறுதிப்படுத்தவில்லை.)