உடலுக்கு ஆதாரமான முதுகெலும்பு வலுவாக இருக்க... முதுகு வலி- கழுத்து வலி நீங்க...செய்ய வேண்டியவை..!
முதுகு வலி- கழுத்து வலி: மோசமான வாழ்க்கை முறை காரணமாக, முதுகெலும்பு சார்ந்த பிரச்சினைகள் அதிகரித்து விட்டன. முதுகெலும்பின் மூட்டுகளில் விரைப்பு, தசைகளில் இருக்கும் ஆகியவை தாங்க முடியாத முதுகு வலியையும் கழுத்து வலியையும் ஏற்படுத்துகின்றன.
முதுகெலும்பில் விறைப்புத்தன்மை: நீண்ட நேரம் உட்கார்ந்து இருப்பதும் குறைவாக நடப்பதும் பிரச்சனைக்கு மூல காரணம். இதனால் முதுகெலும்பில் விறைப்புத்தன்மை வேலைக்கு நடுவே இடையே, சில நிமிடங்கள் நடப்பதையும், விரைப்பு தன்மையை குறைத்து நிவாரணத்தை பெறலாம்.
முதுகெலும்பை வலுப்படுத்தும் பயிற்சிகள்: யோகா பயிற்சிகள், நீட்சி பயிற்சிகள் ஆகியவை முதுகு வலி கழுத்து வலி ஆகியவற்றிற்கு பெரும் நிவாரணம் கொடுக்கும்.முதுகெலும்பை வலுப்படுத்துவதற்கான இந்த பயிற்சிகளால் விறைப்பு தன்மை நீங்கி, தசைகளுக்கும் நிவாரணம் கிடைக்கும். அதோடு நடை பயிற்சியையும் உங்கள் பிசியான வாழ்க்கையில் வழக்கமாக்கிக் கொள்வது அவசியம்
நட்ஸ் மற்றும் விதைகள்: பாதாம் வாதுமை பருப்பு போன்ற உலர் பழங்கள், ஆளி விதை போன்ற விதைகள் ஆரோக்கிய கொழுப்பு அமிலங்கள் நிறைந்தவை. இவை வீக்கத்தை போக்கி எலும்புகளுக்கு வலுவூட்டுகின்றன. மேலும் இவற்றில் எலும்பு ஆரோக்கியத்திற்கு தேவையான கால்சியம், மெக்னீசியம் நிறைந்துள்ளன.
பச்சை இலை காய்கறிகள்:பச்சை இலை காய்கறிகள் முக்கியமாக கீரைகளில், கால்சியம் மெக்னீசியம் வைட்டமின்கள் நிறைந்துள்ளன, இவை எலும்புகளின் வளர்ச்சிக்கும் நரம்புகளின் வலுவுக்கும் அவசியம்.
பருப்பு வகைகள்: பீன்ஸ் மற்றும் பருப்பு வகை உணவுகளில் புரோட்டீன் அதிகமாக உள்ளது. முதுகெலும்பின் ஆரோக்கியத்திற்கு கால்சியம் மட்டுமின்றி புரதமும் அவசியம். தாவர வகை புரோட்டீனில் புரதச்சத்தோடு ஆன்ட்டி ஆக்சிடன்ட் மற்றும் கனிமச் சத்துக்கள் இருப்பதால் எலும்பு ஆரோக்கியம் சிறப்பாக இருக்கும்.
மீன் உணவுகள்:மீன் உணவுகள் குறிப்பாக சால்மன் மீனில் ஒமேகா-3 கொழுப்பு அமிலங்கள் அதிகம் உள்ளன. இது உங்கள் எலும்புகளை வலுவாக்கும். சால்மன் மீனில் புரோட்டீனும் அதிகம் உள்ளது. எலும்புகள் மற்றும் திசுக்களின் ஆரோக்கியத்திற்கு அடிக்கடி மீன் உணவுகளை உட்கொள்ளவும்.
பொறுப்பு துறப்பு: இங்கே கொடுக்கப்பட்டுள்ள தகவல்கள் வீட்டு வைத்தியம் மற்றும் பொதுவான தகவல்களை அடிப்படையாகக் கொண்டவை. இவற்றை பின்பற்றுவதற்கு முன் கண்டிப்பாக மருத்துவ ஆலோசனையைப் பெற வேண்டும். ZEE MEDIA இந்த தகவல்களுக்கு பொறுப்பேற்காது.