தாங்க முடியாத வெயிலை சமாளிக்க...‘இந்த’ இயற்கை பானங்களை குடிங்க!

Wed, 29 May 2024-1:59 pm,

இந்த வெயிலின் வெப்பத்தை சமாளிக்க சில இயற்கை பானங்கள் இருக்கின்றன. அவற்றை இங்கு பார்ப்போமா? 

பழமாக சாப்பிடுவதற்கும், சாறாக சாப்பிடுவதற்கும் உகந்த உணவு பொருள், தர்பூசணி. இதில் இனிப்பு சேர்த்தும் சாப்பிடலாம், சேர்க்காமலும் சாப்பிடலாம். 

வெயிலை சமாளிப்பதற்கு இன்னொரு அருமையான ஜூஸ், கரும்பு சாறு. இதில் புதினா இலைகளை சேர்த்து சாப்பிட்டால் இன்னும் கூட நல்லது என்கின்றனர் மருத்துவர்கள். 

உடல் எடை குறைப்பு, இருதய நோய் பாதிப்பில் இருந்து பாதுகாப்பு போன்ற பல்வேறு நல்ல அம்சங்களை உடலுக்கு அளிக்கிறது, எலுமிச்சை சாறு. 

தயிரை வைத்து செய்யக்கூடிய முக்கியமான பானம், லஸ்ஸி. வெளி மாநிலத்தில் இருந்து வந்ததுதான் என்றாலும், இதற்கு நம் ஊரில் அதிக ரசிகர்கள் இருக்கின்றனர். 

மூலிகைகள், பழங்கள் சேர்த்து ஊற வைத்து தண்ணீரை பருகலாம். இது, நம் உடலில் உள்ள பிணியை போக்குவதோடு மட்டுமன்றி வெயிலையும் சமாளிக்க உதவுகிறது. 

வெயிலையும் இளநீரையும் பிரிக்கவே முடியாது. வெப்பத்தை சமாளிக்க சிறந்த பானங்களுள் ஒன்று, இளநீர். 

லோ பட்ஜெட்டில் வயிறு நிரம்பும் அளவிற்கு குடிக்க கூடிய பானம், மோர். இதனால் பசியையும் சமாளிக்கலாம், வெயிலையும் சமாளிக்கலாம். 

ZEENEWS TRENDING STORIES

By continuing to use the site, you agree to the use of cookies. You can find out more by Tapping this link