Beat the Heat: ருசிக்கும் சுவை! அழகுக்கு அழகூட்டும் ஆரோக்கிய பானங்கள்
இளநீர் என்பது வெயில் காலம் மட்டுமன்றி அனைத்து காலத்திலும் அருந்தும் ஆரோக்கிய பானம். அதில் உள்ள மினரல்கள் உடலுக்கு தேவையான ஆற்றலைக் கொடுக்கின்றன
புதினா உடலுக்கு குளிர்ச்சியை கொடுப்பதுடன் ஆரோக்கியத்திற்கும் நல்லது. புதினாவை பச்சையாக உட்கொள்வதால் உடல் உஷ்ணம், காய்ச்சல், வாந்தி, என பல பிரச்சனைகளிலிருந்தும் விடுபடலாம். வயிற்றைக் குளிர்ச்சியாக வைத்திருக்க புதினா சாறு அல்லது சர்பத்தை அருந்தலாம்.
(Image Source: Pixabay)
இந்தியாவில் வெப்பமான கோடை காலத்தில் எலுமிச்சைப்பழம் அனைவருக்கும் பிடித்த பானமாகும். கோடையில் எலுமிச்சை தண்ணீர் குடிப்பது நீண்ட நேரம் தாகம் தணிக்கும். எலுமிச்சை பல்வேறு வைட்டமின்கள் மற்றும் தாதுக்களின் பொக்கிஷமாக கருதப்படுகிறது. எலுமிச்சை தண்ணீர் குடிப்பதால் உடலில் நீர்ச்சத்து இருக்கும்.
(பட ஆதாரம்: Pixabay)
பழங்கள் ஆரோக்கியத்திற்கு மிகவும் பயனுள்ளதாக கருதப்படுகிறது. பழச்சாறு குடிப்பதன் மூலம், உடலுக்கு உடனடி ஆற்றல் கிடைக்கும். எனவே புதிய பழச்சாறுகளை உட்கொள்வது நல்லது.
(Image Source: Pixabay)
உடலுக்கு எந்தவிதமான பக்க விளைவுகளையும் தராமல், தாகத்தை தணிப்பது மோர். உடலில் நீர்ச்சத்தை தக்கவைக்கும் மோரை, செலவில்லாமல் வீட்டிலேயே தயாரிக்கலாம். அனைவருக்கும் ஏற்ற ஆரோக்கியமான பானம் மோர்...