உத்திர நட்சத்திரத்தில் கேது பெயர்ச்சி... வாழ்க்கையில் சிக்கல்களை சந்திக்கப் போகும் சில ராசிகள்
கேதுவிற்கு நிழல் கிரகம், பாவ கிரகம் என்றும், ஆன்மீக கிரகம் என்றும் பெயர் உண்டு. உலகியல் இன்பங்களில் இருந்து ஒதுங்கி இருக்கக் கூடிய எண்ணத்தைத் தரக்கூடிய கிரகம் கேது என்பதால் கேதுவிற்கு தனிமையை கிரகம் என்றும் பெயர் உண்டு. இந்நிலையில், ஞாயிற்றுக்கிழமை உத்திர நட்சத்திரத்தில் நுழைவது சில ராசிகளுக்கு கெடு பலன்களைக் கொடுக்கும்.
உத்திர நட்சத்திரத்தின் அதிபதி சூரியனும் கேதுவும் பரஸ்பர எதிரிகள். சூரியன் மற்றும் கேதுவின் சேர்க்கை மற்றும் பார்வை 'கிரஹண யோகம்' என்று அழைக்கப்படுகிறது. இது மிகவும் அசுபமாக கருதப்படுகிறது. கேதுவின் நட்சத்திர மாற்றம் அனைத்து ராசிக்காரர்களையும் பாதிக்கும் என்றாலும், 3 ராசிக்காரர்களுக்கு மிகவும் எதிர்மறை பலன்களைக் கொடுக்கும்
தற்போது, கேது கிரகம் ஹஸ்த நட்சத்திரத்தில் அமைந்துள்ள நிலையில், நவம்பர் 10, 2024 ஞாயிற்றுக்கிழமை உத்திர நட்சத்திரத்தில் நுழைகிறது. பன்னிரண்டாவது நட்சத்திரமான உத்திர நட்சத்திரத்தை ஆட்சி கிரகம் சூரியன் எனவே, உத்திர நட்சத்திரத்தில் கேதுவின் சஞ்சாரம் நல்லதல்ல.
கேது நட்சத்திர பெயர்ச்சி: எப்போதுமே வக்ர நிலையில் சஞ்சரிக்கும் ராகு - கேது ஆகிய கிரகங்களின் நிலைகள், சில ராசிக்காரர்களுக்கு வாழ்க்கையில் பிரச்சனைகளையும், சிக்கல்களையும், மன உளைச்சல்களையும் உண்டாக்கும் என கணித்துள்ளனர் ஜோதிட வல்லுநர்கள்.
மேஷ ராசிக்காரர்கள் கேதுவின் தாக்கத்தால் மனக்கவலை அதிகரித்து தனிமையாக உணரலாம். பணம் சம்பாதிக்கும் முயற்சியில் தடைகள் வரலாம். வேலையில் மன அழுத்தம் மற்றும் நிச்சயமற்ற தன்மை அதிகரிக்கும். வருமானம் குறைய வாய்ப்பு உண்டு. வாழ்க்கையில் சிரமங்கள் கணிசமாக அதிகரிக்கும். மாணவர்களுக்கு படிப்பில் ஆர்வம் இருக்காது, கவனக்குறைவு ஏற்படும்.
சிம்ம ராசிக்காரர்களுக்கு கேதுவின் தாக்கத்தால், பிரச்சனைகள் அதிகரிக்கும். மன உளைச்சலை சந்திக்க நேரிடலாம். வருமான ஆதாரங்கள் குறைவதால் நிதி நெருக்கடியை சந்திக்க நேரிடலாம். உத்தியோகத்தில் நிலையற்ற தன்மை இருக்கலாம். சக ஊழியர்களுடன் கருத்து வேறுபாடுகள் வரலாம். புதிய முதலீடுகளை இப்போதே தவிர்க்க வேண்டும். கடன் அதிகரிக்கலாம்.
கேதுவின் தாக்கத்தால், மீன ராசிக்காரர்களுக்கு ஏமாற்றம் மற்றும் சோகம் ஏற்படலாம். வருமான ஆதாரங்கள் நின்று போகலாம். உத்தியோகத்தில் இருப்பவர்களுக்கு வரவிருந்த பதவி உயர்வு தடைபடலாம். தேவையற்ற பணச் செலவுகளால் கடன்கள் அதிகரிக்கலாம். நிதி சிக்கல்களை எதிர்கொள்ள வேண்டியிருக்கும். மாணவ, மாணவியர் தேர்வுகளில் தோல்வியை சந்திக்க நேரிடும்.
பொறுப்புத் துறப்பு: இந்தக் கட்டுரையில் உள்ள தகவல்கள் பல்வேறு ஊடகங்கள், ஜோதிடர்கள், பஞ்சாங்கம், உபதேசங்கள், நம்பிக்கைகள், ஆன்மீக நூல்கள் ஆகியவற்றிலிருந்து சேகரிக்கப்பட்டு உங்களுக்கு வழங்கப்பட்டுள்ளது. எங்கள் நோக்கம் தகவலை வழங்குவது மட்டுமே. ZEE NEWS இதற்கு பொறுப்பேற்காது.