பாசிப்பருப்பை தினமும் சாப்பிட்டால் நன்மையா... இதில் தெரிஞ்சிக்கோங்க!
அலர்ஜி எதிர்ப்பு குணங்கள் இதில் அதிகம் இருப்பதால் உங்கள் உடலில் அலர்ஜி சார்ந்த பிரச்னைகளை போக்கும்.
இதில் அதிக ஊட்டச்சத்து இருப்பது ஒருபுறம் என்றாலும் குறைவான கலோரி இருப்பதால் இது உடல் எடை குறைப்புக்கு அதிக பலனை தரும்.
இதில் இருக்கும் கரைக்கூடிய ஃபைபர் ஆண்டுஆக்ஸிடண்ட்கள் கெட்ட கொலஸ்ட்ராலின் அளவை கட்டுப்படுத்தி உங்கள் இதயத்தை ஆரோக்கியமாக வைத்திருக்கும்.
இதில் அதிக ஃபைபர் இருப்பதால் உங்களுக்கு மலச்சிக்கல் ஏதுமின்றி ஆரோக்கியமாக இருக்கலாம்.
முக்கிய ஊட்டச்சத்துகளான இரும்புச்சத்து, மேக்னீஸியம், போட்டாசியம் மற்றும் வைட்டமிண் C, வைட்டமிண் B தாதுக்கள் ஆகியவை இதில் நிறைந்துள்ளன.
அதிகப் புரதம் இருப்பதால் பாசிப்பருப்பை நிச்சயம் தினமும் சாப்பிடலாம்.
பொறுப்பு துறப்பு: பாசிப்பருப்பை தினமும் சாப்பிட்டால் கிடைக்கும் நன்மைகள் இதில் தெரிந்துகொண்டிருப்பீர்கள். இது பொதுத் தகவலை அடிப்படையாக கொண்டது. எனவே, தினமும் சாப்பிடவதாக முடிவெடுத்தால் நீங்கள் மருத்துவ ஆலோசனையை பெற்றே ஆக வேண்டும். இந்த தகவல்களை Zee News உறுதிப்படுத்தவில்லை.