மூட்டு வலிக்கு முடிவு கட்ட... ‘இந்த’ எண்ணெய்களை கொண்டு மசாஜ் செய்யவும்!
இன்றைய காலகட்டத்தில் 40 வயதைக் கடந்தவர்களுக்கு கூட மூட்டுவலி வருவதை காணாலாம். இதிலிருந்து விடுபட பலர் பல விதமான வைத்தியங்களை செய்தாலும் எளிமையான வீட்டு வைத்தியத்திலேயே மூட்டு வலியை போக்குவதற்கு வழிகள் இருக்கின்றன.
ஒமேகா-3 கொழுப்பு அமிலங்கள் மற்றும் தாமிரம் போன்றவை நிறைந்துள்ள நல்லெண்ணெய் கொண்டு மசாஜ் செய்தால், மூட்டு வலியில் இருந்து சிறந்த நிவாரணம் கிடைக்கும்.
மூட்டு வலிக்கு கடுகு எண்ணெய் மிகவும் வியக்கத் தக்க வகையில் நிவாரணம் கிடைக்கும். மூட்டு வலியால் சிரமப்படுபவர்கள், பூண்டுடன் 2 முதல் 3 ஸ்பூன் கடுகு எண்ணெயை சூடாக்கி, பின், இந்த எண்ணெயைக் கொண்டு உங்கள் பாதங்களை மசாஜ் செய்யவும். மேலும் கடுகு எண்ணெய் கதகதப்பைக் கொடுக்க கூடியது.
வைட்டமின் ஈ, ஆண்டி - ஆக்சிடென்டுகள் மற்றும் அழற்சி எதிர்ப்பு பண்புகள் உள்ள பாதாம் எண்ணெயைக் கொண்டு மசாஜ் செய்தால், எலும்புகள் வலுவடையும். பாதாம் எண்ணெய்யை லேசாக வெதுவெதுப்பாகச் சூடாக்கி, இந்த எண்ணெய்யைக் கொண்டு மூட்டுகளில் மசாஜ் செய்யவும்
மூட்டு வலியிலிருந்து நிவாரணம் பெற, தேங்காய் எண்ணெய் சிறந்ததாக கருதப்படுகிறது. இந்த எண்ணெயில் அழற்சி எதிர்ப்பு மற்றும் வலி நிவாரணி பண்புகள் உள்ளதால், மூட்டு வலிக்கு பெரும் நிவாரணம் அளிக்கிறது.
மூட்டு வலிக்கு ஆலிவ் எண்ணெய் கொண்டு மசாஜ் செய்தால் வலியில் இருந்து நிவாரணம் கிடைக்கும். இது தவிர, இரத்த ஓட்டத்தையும் மேம்படுத்துகிறது. தசைப்பிடிப்பு, வலி இருந்தாலும், இந்த எண்ணெய்யை மசாஜ் செய்யலாம்.
(பொறுப்பு துறப்பு: இங்கே கொடுக்கப்பட்டுள்ள தகவல்கள் வீட்டு வைத்தியம் மற்றும் பொதுவான தகவல்களை அடிப்படையாகக் கொண்டவை. இவற்றை பின்பற்றுவதற்கு முன் கண்டிப்பாக மருத்துவ ஆலோசனையைப் பெற வேண்டும். ZEE MEDIA இந்த தகவல்களுக்கு பொறுப்பேற்காது.)