Weight Loss Yoga: அதிக கலோரிகளை எரித்து... கொழுப்பை கரைக்கும் சூப்பர் யோகாசனங்கள்
யோகாசனங்கள் உடல் மற்றும் மன ஆரோக்கியம் இரண்டையும் மேம்படுத்தும் என்பது அனைவரும் அறிந்ததே. மூளை சுறுசுறுப்பாக இயங்குவது முதல், கடுமையான நோய்களை தீர்ப்பது வரை யோகாசனங்களால் கிடைக்கும் நன்மைகள் ஏராளம். இந்நிலையில், உடல் பருமனை குறைக்கவும், தொப்பை கொழுப்பை எரிக்கவும், தினமும் செய்ய வேண்டிய சில சிறந்த யோகாசனங்களை அறிந்து கொள்வோம்.
பலகாசனம் கொழுப்பை எரிப்பதன் மூலம் எடையைக் குறைக்க மிகவும் நன்மை பயக்கும். தரையில் குப்புற படுத்து, முழங்கைகள் மற்றும் கால்களின் உதவியுடன் உங்கள் உடலை உயர்த்தி இதே நிலையில் சிறிது நேரம் நீடித்து இருக்கவும். இதனால் வயிற்று தசைகள் இறுக்கமாகி, உடலின் தோரணையும் மேம்படும். இதில் நீங்கள் பலனை 10 நாட்களில் உணர்வீர்கள்.
உட்கடாசனம் அதாவது நாற்காலி போஸ், தசைகளுக்கு அதிக வேலை கொடுத்து அதிக கலோரிகளை எரிக்கிறது. இந்த ஆசனத்தில் நாற்காலியில் உட்காருவது போல் நிற்க வேண்டும். முதலில் இரண்டு கால்களையும் விரித்து பிறகு இரு கைகளையும் முன்னோக்கி நீட்டவும். பின் மெதுவாக முழங்கால்களை வளைத்து, இடுப்பை கீழே இறக்கி, ஒரு நாற்காலியில் அமர்ந்திருப்பது போல் உங்கள் நிலை இருக்க வேண்டும். இந்த நிலையில், ஒரு நிமிடத்திற்கு நீடித்து இருக்க முயற்சிக்கவும்.
தனுராசனத்தில், உடலை வில் போல் வளைக்க வேண்டும். இதைச் செய்ய, உங்கள் குப்புற படுத்துக் கொள்ளுங்கள். உடலை வில் போல் வளைத்து, சுவாசத்தை உள்ளிழுத்துக் கொண்டு பின் மெதுவாக சுவாசத்தை வெளிவிட்டவாறே படத்தில் காட்டியுள்ளபடி கைகளால் கால்களைப் பிடிக்க முயற்சிக்கவும். இந்த யோகாவை செய்யலாம். இதுவும் தொப்பை கொழுப்பை கரைக்கும் சிறந்த ஆசனம்
திரிகோணாசனத்தை தினமும் செய்வதன் மூலம் ஒரே வாரத்தில் தொப்பையை குறைக்கலாம். இந்த யோகா பயிற்சியில், ஒரு காலை அகல விரித்து, சுவாசத்தை உள்ளிழுத்துக் கொண்டு பின் மெதுவாக சுவாசத்தை வெளிவிட்டவாறே குனிந்து வலது கையால் இடது காலைத் தொடவும். இப்பொழுது, இடது கை மேல் நோக்கி இருக்க வேண்டும்.
புஜங்காசனம் உடல் எடையை குறைப்பதோடு, முதுகெலும்பை பலப்படுத்துகிறது. வயிறு, மார்பு மற்றும் தோள்களுக்கு வலுவீட்டுகிறது. இந்த ஆசனம் செரிமானத்தை மேம்படுத்தி அதிக கலோரிகளை எரிக்கிறது. புஜங்காசனம் செய்ய, தரையில் படுத்து, இரு கைகளையும் தரையில் ஊன்றி தலையை முன்னோக்கி இழுத்து நாகப்பாம்பு போல் தலையை தூக்கவும். இந்த நிலையில் சிறிது நேரம் நீடிக்கவும்.
நௌகாசனம்: நேராக படுத்துக் கொண்டு. மூச்சை ஆழமாக உள்ளிழுத்து இரு கால்களையும் உயர்த்திக் கொண்டே செல்லவும். இரு கைகளையும் கால்களுக்கு இணையாக வைக்த்துக் கொள்ளவும். உங்கள் உடலை 45 டிகிரியில் இருக்க வேண்டும், அதே சமயம், உங்கள் முழங்கை மற்றும் முழங்காலை வளைக்கக்கூடாது. இப்படி சில நொடிகள் நீடித்து பின்னர் ரிலாக்ஸ் செய்து கொள்ளவும். இது தொப்பை கொழுப்பை மட்டுமின்றி, தொடை கொழுப்பையும் கரைக்கும்.
பொறுப்பு துறப்பு: இங்கே கொடுக்கப்பட்டுள்ள தகவல்கள் வீட்டு வைத்தியம் மற்றும் பொதுவான தகவல்களை அடிப்படையாகக் கொண்டவை. இவற்றை பின்பற்றுவதற்கு முன் கண்டிப்பாக மருத்துவ ஆலோசனையைப் பெற வேண்டும். ZEE MEDIA இந்த தகவல்களுக்கு பொறுப்பேற்காது.