Honda Benly e மின்சார ஸ்கூட்டர் விரைவில் இந்தியாவில் அறிமுகம்: முக்கிய அம்சங்கள் பிற விவரங்கள் இதோ
ஜப்பானிய வாகன உற்பத்தியாளர் ஹோண்டா தற்போது பென்லி இ- இன் நான்கு வெவ்வேறு மாடல்களை ஜப்பான் மற்றும் இ-ஸ்கூட்டர் அறிமுகப்படுத்தப்பட்ட பிற நாடுகளில் விற்பனை செய்து வருகிறது. இந்த மாதிரிகள் பென்லி இ I, பென்லி இ I புரோ, பென்லி இ II மற்றும் பென்லி இ II புரோ ஆகியவையாகும். இ-ஸ்கூட்டர்களின் ப்ரோ வகைகள் முன்பக்கத்தில் ஒரு பெரிய சேமிப்பு கூடை மற்றும் ஒரு பெரிய பின்புற கேரியர் போன்ற கூடுதல் அம்சங்களுடன் வருகின்றன.
இந்தியாவில் அறிமுகவாகவுள்ள ஜப்பானிய வாகன உற்பத்தியாளர் ஹோண்டாவின் எலக்ட்ரிக் ஸ்கூட்டர் பென்லி இ-யின் சோதனைகள் இந்திய ஆட்டோமோடிவ் ஆராய்ச்சி சங்கத்தில் (ARAI) நடைபெற்று வருகின்றன. அனைத்தும் திட்டமிட்டபடி நடந்தால், ஹோண்டா 2021 இல் இந்த இ-ஸ்கூட்டரை அறிமுகப்படுத்தக்கூடும்.
தினசரி பிக் அப் மற்றும் விநியோக சேவைகளுக்குப் பயன்படுத்தப்படும் வாகனங்களுக்கான சொதனைகளை ARAI செய்கிறது. ஹோண்டா பென்லி இ முக்கியமாக உணவு விநியோக மற்றும் இணையவழி விநியோக நிறுவனங்களால் பயன்படுத்தப்படக்கூடும் ஒரு மொப்பட் என்பதால், இந்த பைக் ARAI சோதனைக்கு உட்படுத்தப்பட வேண்டும்.
ஹோண்டா பென்லி இ எல்இடி ஹெட்லேம்ப், டிஜிட்டல் இன்ஸ்ட்ரூமென்ட் கிளஸ்டர் மற்றும் துணை பவர் சாக்கெட் ஆகியவற்றுடன் வருகிறது என்று ருஷ்லானின் அறிக்கை கூறுகிறது. இந்த பைக்கில் ஒரு பிளாட் ரியர் டெக் மற்றும் முன்புறத்தில் 60 கிலோ வரை சுமக்கக்கூடிய ஒரு பெரிய கூடை ஆகியவை உள்ளன. ரிவர்ஸ் அசிஸ்ட் செயல்பாடு, ஸ்கூட்டரை குறுகிய பாதையிலும் செலுத்த உதவுகின்றன. ஸ்கூட்டரின் 12 அங்குல முன் டயர் 90/90 பிரிவையும், 10 அங்குல பின்புற சக்கரம் 110/90 பிரிவையும் கொண்டுள்ளது. ஸ்கூட்டரின் எடை சுமார் 125-130 கிலோ ஆகும்.
பென்லி இ I மற்றும் I புரோ-வில் 2.8 கிலோவாட் (3.8 பிஎஸ்) மின்சார மோட்டரைக் கொண்டுள்ளன. இவை 13 என்எம் பீக் டார்க்கை உருவாக்கும் திறன் கொண்டவை. பென்லி இ II மற்றும் II ப்ரோ 4.2 கிலோவாட் (5.7 ஹெச்பி) மின்சார மோட்டருடன் வருகின்றன. இவை 15 என்எம் பீக் டார்க்கை உருவாக்கும் திறன் கொண்டவை. இந்த மாறுபாடு மணிக்கு 43-60 கிமீ வேகத்தை வழங்குகிறது.