எந்த பானத்தை எப்போது குடித்தால் தட்டையான ஒல்லி வயிறு சாத்தியம்? நிபுணர்கள் அட்வைஸ்!

Tue, 20 Feb 2024-4:24 pm,

சிக்கென்ற சின்ன இடை என்பது வெறும் அழகான தோற்றத்திற்காக மட்டுமல்ல, ஆரோக்கியத்திற்காகவும் தான் என்ற விழிப்புணர்வு பலருக்கும் வந்துவிட்டது. அதனால் தான், இணையத்தில் அதிகம் தேவைப்படும் விஷயங்களில், ‘உடல் எடை  குறைப்பு’. ‘ஒல்லியாக வழிகள்’, கொழுப்பை குறைக்க டிப்ஸ்’ என எடை குறைப்பு தொடர்பான தகவல்கள் அதிகம் தேடப்படுகின்றன.

உடல் எடை கூடுவது என்பது சுலபமாக நடந்துவிடுகிறது. அதாவது, பணத்தை செலவு செய்வதைப் போல உடல் எடை சட்டென கூடிவிடும். ஆனால், பணம் சம்பாதிக்கப்படும் கஷ்டங்களைப் போன்று, ஏறிய எடையை குறைப்பதற்கும் பலரும் கஷ்டப்படுகின்றனர்

காலையில் வெறும் வயிற்றில் வெந்தய தண்ணீரைக் குடிப்பது பல்வேறு ஆரோக்கிய நன்மைகளைக் கொடுத்தாலும், ஆரோக்கியத்திற்கு மிகவும் முக்கியமான பலன்களைக் கொடுக்கிறது. அதிலும், உடல் எடை குறைப்பில் வெந்தய நீர் அருமையாக வேலை செய்கிறது

உடலை குளிர்ச்சியாக்கும் புதினாவை இரவில் நீரில் போட்டு ஊறவைத்துவிட்டு, காலையில் வெறும் வயிற்றில் குடித்தால், வயிற்று பிரச்சனைகள் உட்படம், வயிற்றில் உள்ள ஊளைச்சதையையும் குறைத்துவிடும்

உடல்நலனுக்கும், அழகுக்கும் கற்றாழை செய்யும் மாயாஜாலத்தை வார்த்தைகளில் அடக்கிவிட முடியாது. அதிலும், உடல் எடையை குறைக்க, காலையில் வெறும் வயிற்றில் கற்றாழை ஜூஸ் குடித்தால் போதும், ஆலிழை போல ஒட்டிய வயிறு உங்களுக்கு வாய்க்கும்

சீரகம் போட்டு கொதிக்க வைத்த வெந்நீரை எப்போது பருகினாலும் நன்மை தான் என்றாலும், காலையில் வெறும் வயிற்றில் குடிப்பதால் பல நன்மைகள் கிடைக்கும்

கறிவேப்பிலை, இஞ்சி, வெல்லம், சேர்த்து அரைத்து, அதில் கொஞ்சம் எலுமிச்சை சாறு சேர்த்து பருகினால், நோய் உங்களை அண்டாது. நோயெதிர்ப்பு சக்தி கொண்ட இந்த பானம், உங்கள் உடலில் இருக்கும் கொழுப்புகளையும் குறைத்து அழகான உடல்வாகைக் கொடுக்கும்

முருங்கை இலையை, ஜூஸாகவோ அல்லது சூப்பாகவோ வைத்துக் குடித்துவந்தால் போதும். அதிலும் காலையில் வெறும் வயிற்றில் குடித்து வந்தால் உடல் எடை குறையும்

ZEENEWS TRENDING STORIES

By continuing to use the site, you agree to the use of cookies. You can find out more by Tapping this link