தனித் தனியா பணம் செலவழிக்க வேண்டாம்... Wifi, OTT, DTH எல்லாம் ஒரே ரீசார்ஜ் பிளானில் - முழு விவரம்!

Tue, 31 Oct 2023-4:25 pm,

இப்போது பலரும் தங்களது வீட்டில் தொலைக்காட்சிக்காக DTH மற்றும் புதிய படங்கள், வெப்சீரிஸ்களை பார்க்க ஓடிடி ஆகியவற்றை சந்தா செலுத்தி பயன்படுத்துகின்றனர். 

மேலும், வீட்டில் அனைவரின் இணைய பயன்பாட்டுக்கு Wifi வசதியும் வைத்துக்கொள்கின்றனர். கொரோனா தொற்றுக்கு பின் பலரும் பணிசார்ந்து அதை வைத்துக்கொள்கின்றனர். 

அந்த வகையில் DTH, Fiber, லேண்ட்லைன், ஓடிடி போன்ற பலன்களை ஒரே திட்டத்தில் பெற ஏர்டெல் ஒரு ரீசார்ஜ் திட்டத்தை வைத்துள்ளது.

இந்த ரீசார்ஜ் திட்டம் 1099 ரூபாய் ஆகும். இதன் மூலம், 200Mbps வேகம் உள்ள பிராட்பேண்ட்டை பெறுவீர்கள். மாதம் 3.3TB டேட்டா கிடைக்கும். இது மாதத்திற்கான திட்டமாகும்.

ஏர்டெல் இந்த திட்டத்தில் மூலம் DTH இணைப்பையும் தருகிறது மேலும், இதில் மாதம் ரூ.350 மதிப்பிலான டிவி சேனல்களை இலவசமாக வழங்குகிறது. 

இதனை ரீசார்ஜ் செய்வதன் மூலம், அமேசான் பிரைம், டிஸ்னி+ஹாட்ஸ்டார், ஏர்டெல் XStream Play உள்ளிட்ட ஓடிடி சந்தாவை ஒரே மாதத்திற்கு இலவசமாக பெறலாம். 

மேலும், ஹார்ட்வேர் சாதனங்களை பொருத்த ரூ.3300 அட்வான்ஸ் வசூலிக்கப்படும். வருங்கால பில்களில் அவை கழிக்கப்படும். இதில் லேண்ட்லைனையும் நீங்கள் பெறலாம். அதில் இலவசமாக நீங்கள் பேசிக்கொள்ளலாம். 

ZEENEWS TRENDING STORIES

By continuing to use the site, you agree to the use of cookies. You can find out more by Tapping this link