குரு சந்திரன் சேர்க்கையால் உருவாகும் ராஜயோகங்கள்: 3 ராசிகளுக்கு பம்பர் ஜாக்பாட்
குரு சந்திரன் சேர்க்கை: மே 24, 2023 புதன்கிழமை ஜோதிடத்தில் மிகவும் முக்கியமான நாளாகும். ஏனென்றால் அன்று குரு மற்றும் சந்திரனின் சங்கமம் ஏற்படும். குரு மற்றும் சந்திரனின் சேர்க்கையால் இரண்டு சுப யோகங்கள் உருவாகின்றன.
குரு சந்திரன் சேர்க்கை: குரு மற்றும் சந்திரனின் சேர்க்கையால் கஜகேசரி ராஜயோகம் மற்றும் மஹாலக்ஷ்மி ராஜயோகம் ஆகியவை உருவாகின்றன. இந்த யோகங்கள் அதிகப்படியான சுப பலன்களை அளிக்கக்கூடிய யோகங்களாக பார்க்கப்படுகின்றன.
கஜகேசரி ராஜயோகம் மற்றும் மஹாலக்ஷ்மி ராஜயோகம் ஆகியவற்றின் தாக்கம் அனைத்து ராசிகளிலும் இருக்கும். இருப்பினும் சில ராசிக்காரர்களுக்கு இதன் அபரிமிதமான நற்பலன்கள் கிடைக்கும். அந்த ராசிகளை பற்றி இங்கே காணலாம்.
மேஷன்: மேஷ ராசிக்காரர்களுக்கு இந்த ராஜயோகம் மிகவும் சிறப்பாக அமையும். குரு பகவான் மேஷ ராசியில் இருப்பதால், இவர்கள் அபரிமிதமான செல்வத்தைப் பெறுவார்கள். அலுவலகத்தில் உங்கள் பணி பாராட்டப்படும். வெகு நாட்களாக நடக்காமல் இருந்த வேலைகள் எளிதாக நிறைவேறும். இந்த ராஜயோகம் உழைக்கும் வர்க்கத்தினருக்கு மங்களகரமானதாக இருக்கும், அவர்கள் பொருளாதார ரீதியாகவும் பயனடைவார்கள்.
மிதுனம்: மிதுன ராசிக்காரர்களுக்கு இந்த இரண்டு ராஜயோகங்களால் திடீரென பண வரவு நன்றாக இருக்கும். சுற்றியுள்ளவர்கள் உங்கள் செல்வாக்கால் ஈர்க்கப்படுவார்கள். பொருளாதார முன்னேற்றத்துடன், பணம் சம்பாதிக்க பல வழிகள் பிறக்கும். மார்க்கெட்டிங் அல்லது விற்பனைத் துறையில் உள்ளவர்களுக்கு இது ஒரு அதிர்ஷ்டமான நேரமாக இருக்கும்.
துலாம்: துலாம் ராசிக்காரர்களுக்கு இந்த யோகம் மிகவும் சாதகமாக இருக்கும். துலாம் ராசிக்கு 10ம் வீட்டில் சந்திரனும், 7ம் வீட்டில் குருவும் இருப்பதால், நீங்கள் நிதி நன்மைகளுடன் முன்னேற்றத்தின் உயர் உச்சத்தை அடையப் போகிறீர்கள். வீட்டில் மகிழ்ச்சியும் செழிப்பும் இருக்கும். உங்கள் வாழ்க்கைத் துணையும் நல்ல முன்னேற்றம் காண்பார். வீட்டில் மகிழ்ச்சியான சூழல் நிலவும்.