மந்தமான மூளையையும் முறுக்கேற்றி சூப்பர் பிரெயின் ஆக்கும் உணவுகள்!
சில எளிய வாழ்க்கை முறை மாற்றங்களைச் சேர்ப்பது உகந்த மூளை செயல்பாட்டை மேம்படுத்துவதோடு வாழ்நாள் முழுவதும் அறிவாற்றல் உயிர்ச்சக்தியைப் பராமரிக்கும்
மூளை ஆரோக்கியத்திற்கு அவசியமான உணவுகளில் முக்கியமான வால்நட். வால்நட் பருப்பில் உள்ள சுருண்ட மடிப்புகள் மனித மூளையைப் போல் தோற்றமளிப்பதாகும். இது. முதுமை மறதி, நினைவாற்றல் இழப்பு, மனத் தளர்ச்சி எனப்படும் டெமென்சியா நோயைத் தவிர்க்கவும் இது உதவும்
வைட்டமின் பி2 , வைட்டமின் பி12 மற்றும் வைட்டமின் டி போன்ற ஊட்டச்சத்துக்கள் நிறைந்துள்ளன. தாதுக்களான ஃபோலேட் , பாஸ்பரஸ் , செலினியம் , கால்சியம் மற்றும் துத்தநாகம் போன்றவையும் முட்டைக்கருவை உண்பதன் மூலம் கிடைக்கிறது. இவை மூளையை சுறுசுறுப்பாக்கும்
நோயற்ற வாழ்விற்கு முக்கிய பங்கு வகிக்கும் காய்கறிகளில் பல சத்துக்கள் நிறைந்துள்ளன. அதிலும் நாம் தினசரி பச்சை இலை காய்கறிகளை அவசியம் சேர்த்துக் கொள்ள வேண்டும்
முழு தானியங்களில் உள்ள ஊட்டச்சத்துக்கள் மற்றும் நார்ச்சத்து, நமது உடலின் செரிமான செயல்களுக்கு அத்தியாவசியமானவை, அத்துடன் இதிலுள்ள சத்துக்கள் மூளைத் திறனுக்கு அவசியமானவை
அசைவம் சாப்பிடுபவர்கள் உணவில் அதிகம் மீன் சேர்த்து வரலாம். கொழுப்பு அமிலம் குறைவால் நரம்புகளில் பாதிப்பு ஏற்பட்டிருந்தால் உணவில் மீனை அதிகம் சேர்த்துவரலாம்.
நாகப்பழத்தில், கால்சியம், பாஸ்பரஸ், இரும்பு, மெக்னீசியம், வைட்டமின் சி, சோடியம் மற்றும் பல பண்புகள் உள்ளன. இவை மூளையின் மந்தத்தன்மையை போக்கக்கூடியவை
ஒமேகா-3 கொழுப்பு அமிலங்கள், முழு தானியங்கள், பழங்கள், கொட்டைகள் மற்றும் தாவர அடிப்படையிலான புரதங்கள் நிறைந்த உணவை உண்ணுங்கள். மீன், பழங்கள் மற்றும் காய்கறிகளில் கவனம் செலுத்தலாம். கடல் உணவு குறிப்பாக நன்மை பயக்கும்.
பொறுப்புத் துறப்பு: இங்கே கொடுக்கப்பட்டுள்ள தகவல்கள் வீட்டு வைத்தியம் மற்றும் பொதுவான தகவல்களை அடிப்படையாகக் கொண்டவை. இவற்றை ஏற்றுக்கொள்வதற்கு முன்னர் கண்டிப்பாக மருத்துவ ஆலோசனையைப் பெறுங்கள். ஜீ மீடியா இந்த தகவல்களுக்கு பொறுப்பேற்காது.