EPFO 3.0: பிஎஃப் பங்களிப்பு வரம்பு, ATM மூலம் PF தொகை.... அரசின் பெரிய திட்டங்கள்
பிஎஃப் உறுப்பினரா நீங்கள்? அப்படியென்றால் இந்த பதிவு உங்களுக்கு மிக உதவியாக உள்ளது. மிக விரைவில் இபிஎஃப் செயல்பாடுகளில் பல மாற்றங்கள் வரவுள்ளன.
இபிஎஃப் உறுப்பினர்களுக்கு (EPF Members) பல புதிய அறிவிப்புகளை வெளியிடக்கூடிய EPFO 3.0 ஐ கொண்டு வர அரசாங்கம் தீவிரமாக தயாராகி வருவதாக கூறப்படுகின்றது. தொழிலாளர் மற்றும் வேலைவாய்ப்பு அமைச்சகத்தின் சில மூத்த அதிகாரிகள் இது குறித்து சில தகவல்களை பகிர்ந்துகொண்டனர்.
இபிஎஃப்ஓ மூலம் வெளிவரக்கூடிய அறிவிப்புகளில் மிக முக்கியமானது, வருங்கால வைப்பு நிதிக்கான ஊழியர்களின் பங்களிப்பு வரம்பை அதிகரிப்பதாகும். தற்போது, ஊழியர்கள் தங்கள் அடிப்படை ஊதியத்தில் 12% தொகையை வருங்கால வைப்பு நிதிக்கு வழங்க வேண்டும் என்ற விதி உள்ளது. இந்த விதி எதிர்காலத்தில் மாற்றப்படலாம்.
மாதா மாதம் இபிஎஃப் கணக்கில் டெபாசிட் செய்யப்படும் தொகைக்கான வரம்பை அரசாங்கம் நீக்கக்கூடும் என கூறப்படுகின்றது. பணியாளர்கள் தங்கள் இபிஎஃப் கணக்கில் எவ்வளவு பணம் வேண்டுமானாலும், எந்த நேரத்தில் வேண்டுமானாலும் தங்கள் சேமிப்புத் திறனுக்கு ஏற்ப டெபாசிட் செய்யலாம். அதன் நோக்கம் சந்தாதாரர்களுக்கு முடிந்தவரை சேமிப்பதற்கான வழிகளை ஏதுவாக்குவதாகும்.
இந்த இபிஎஃப் தொகையை (EPF Amount) ஓய்வு பெறும் சந்தாதாரர்களுக்கு அதிக ஓய்வூதியம் வழங்குவதற்கான விருப்பமாக மாற்றும் வாய்ப்பும் உள்ளது. இருப்பினும், முதலாளிகள் / நிறுவனங்கள் அளிக்கும் பங்களிப்பில் எந்த மாற்றமும் இருக்காது. இந்த சூத்திரம் குறித்து தொழிலாளர் அமைச்சகம் விவாதித்து வருகிறது.
EPFO சந்தாதாரர்களுக்கு இன்னும் சில நாட்களில் அரசாங்கம் மற்றொரு பெரிய அறிவிப்பை வெளியிடக்கூடும். இபிஎஃப் சந்தாதாரர்களுக்கு டெபிட் கார்டு போன்ற ஏடிஎம் கார்டு வழங்கப்படலாம். இதன் மூலம், வருங்கால வைப்பு நிதியில் டெபாசிட் செய்யப்பட்ட பணத்தை ஏடிஎம்மில் இருந்து ஊழியர்கள் எடுக்க முடியும்.
இந்த வசதியின் மூலம் சந்தாதாரர்கள் வருங்கால வைப்பு நிதியில் டெபாசிட் செய்யப்பட்ட தொகையில் 50 சதவீதத்தை எடுப்பதற்கான வாய்ப்பு அளிக்கப்படும். EPFO இன் புதிய கொள்கையை அரசாங்கம் 2025 புதிய ஆண்டில் அறிவிக்கக்கூடும். EPFO 3.0 மே-ஜூன் 2025 இல் செயல்படுத்தப்படலாம் என்று கூறப்படுகின்றது.
தொழிலாளர் அமைச்சகம் EPFO இன் IT அமைப்பில் பெரிய மேம்பாடுகளைச் செய்ய தயாராகி வருகிறது. ஊழியர்கள் அனைத்து வித பரிவர்த்தனையையும் எளிதாக செய்ய இந்த மேம்பாடுகள் மிகவும் உதவியாக இருக்கும்.
இபிஎஃப்ஓ இந்த மேம்பாடுகளுக்கான பணிகள் இரண்டு கட்டங்களில் செயல்படுத்தபடுகின்றன. 1- EPFO 2.0 இன் கீழ் உள்ள கணினி சீர்திருத்தங்கள் அடுத்த மாதம் 2024 டிசம்பரில் நிறைவடையும். இது அமைப்பில் உள்ள 50 சதவீத பிரச்சனைகளை தீர்க்கும். 2- EPFO 3.0 மே-ஜூன் 2025க்குள் நிறைவடையும். இதில் தகவல் தொழில்நுட்ப அமைப்பில் மேம்பாடுகளும் அடங்கும்.
பொறுப்பு துறப்பு: இந்த செய்தி தகவல் நோக்கங்களுக்காக மட்டுமே எழுதப்பட்டுள்ளது. சமீபத்திய மற்றும் துல்லியமான தகவல்களுக்கு சம்பந்தப்பட்ட அதிகாரப்பூர்வ தளங்களை பார்வையிட பரிந்துரைக்கபப்டுகின்றது.