EPS: PF உறுப்பினர்களுக்கு கிடைக்கும் 7 வகையான ஓய்வூதியங்கள் இவைதான்

Wed, 07 Aug 2024-3:43 pm,

EPF கணக்கு வைத்திருப்பவர்கள் 58 வயதில் 10 வருட சேவை முடிந்தவுடன் சூப்பரானுவேஷன் ஓய்வூதிய பலனைப் பெறலாம். 

ஒரு இபிஎஃப் உறுப்பினர் (EPF Member) 50 வயதுக்கு மேற்பட்டவராகவும், 10 வருட சேவையை முடித்தவராகவும் இருந்து EPF அல்லாத நிறுவனத்தில் சேர்ந்திருக்கிறார் என வைத்துக்கொள்வோம். அவர் முன்கூட்டியே ஓய்வூதியம் பெற தகுதியுடையவர் ஆகிறார். இருப்பினும், இந்த ஓய்வூதியம், ஓய்வூதிய வயதான 58 வயதுடன் ஒப்பிட்டு ஒவ்வொரு ஆண்டும் 4% குறைவாக இருக்கும். உதாரணமாக, ஒருவர் 58 வயதில் ரூ.10,000 மாதாந்திர ஓய்வூதியம் பெற தகுதியுடையவராக இருந்தால், 57ல் ரூ.9,600 மற்றும் 56ல் ரூ.9,200 ஓய்வூதியமாக கிடைக்கும்.

 

இபிஎஃப் சந்தாதாரர் (EPF Subscriber) இறந்துவிட்டால், அவரது விதவை மற்றும் 25 வயதுக்குட்பட்ட இரண்டு குழந்தைகள் விதவை ஓய்வூதியம் பெற தகுதியுடையவர்களாகிறார்கள். குழந்தைகளுக்கு 25 வயதாகும் போது, ​​அவர்கள் ஓய்வூதியம் பெற தகுதியற்றவர்களாகி விடுகின்றனர். இங்கு, இபிஎஃப் கணக்கு (EPF Account) வைத்திருப்பவரின் குறைந்தபட்ச வயது வரம்பான 50 வயது அல்லது குறைந்தபட்சம் 10 ஆண்டுகள் சேவை ஆகியவை பொருந்தாது.

EPF கணக்கு வைத்திருப்பவர் மற்றும் அவரது வாழ்க்கைத் துணை இறந்தால், 25 வயதுக்குட்பட்ட இரண்டு குழந்தைகள் அனாதை ஓய்வூதியம் பெறலாம். 25 வயதை அடைந்தவுடன், ஓய்வூதியம் நிறுத்தப்படும்.

EPF கணக்கு வைத்திருப்பவர் திருமணமாகாதவராக இருந்து இறந்துவிட்டால், அவரது தந்தை மற்றும் தந்தை இறந்த பிறகு, அவரது தாயார் வாழ்நாள் முழுவதும் ஓய்வூதியம் பெற தகுதியுடையவராவார்கள்.

இபிஎஃப் கணக்கு வைத்திருக்கும் PF உறுப்பினர் ஊனமுற்றால் (நிரந்தர அல்லது தற்காலிகமாக) இந்த வகையான ஓய்வூதியத்திற்கு தகுதியுடையவர் ஆகிறார். இதைப் பெற, 10 ஆண்டுகள் சேவை அல்லது குறைந்தபட்ச வயது வரன்பான 50 வயது ஆகியவற்றை பூர்த்தி செய்யத் தேவையில்லை. ஒருவர் ஒரு மாத பங்களிப்பு செய்திருந்தாலும் இந்த ஓய்வூதியத்தைப் பெற முடியும். 

EPF உறுப்பினர் தனது மரணத்திற்கு பிறகு, ஓய்வூதியம் பெற யாரையாவது நாமினியாக பரிந்துரைத்திருந்தால், நாமினி ஓய்வூதியத்தைப் பெறலாம். EPFO போர்ட்டலில் ஈ-நாமினேட் செய்ய முடியும். 

 இபிஎஃப் உறுப்பினர்கள் தங்களது பிஎஃப் கணக்கில் ஒவ்வொரு மாதமும் தங்கள் ஊதியத்தில் 12% -ஐ டெபாசிட் செய்கிறார்கள். அதே அளவு தொகையை நிறுவனமும் டெபாசிட் செய்கிறது. இபிஎஃப் கணக்கில் சேமிக்கப்படும் தொகை, ஊழியர்களின் எதிர்காலத்திற்கான மிகச் சிறந்த மற்றும் பாதுகாப்பான முதலீடாகவும் பார்க்கப்படுகின்றது. 

EPFO மூலம் நிர்வகிக்கப்படும் பணியாளர் வருங்கால வைப்பு நிதி (EPF), பணி ஓய்வுக்கு பிறகான முக்கியமான நிதி ஆதாரமாக பார்க்கப்படுகின்றது. குறிப்பாக, தனியார் துறையில் பணிபுரிபவர்களுக்கு பணி ஓய்வுக்குப் பிறகு ஓய்வூதியத்தைப் பெற EPFO ​​மூலம் வாய்ப்பு கிடைக்கிறது.  

ZEENEWS TRENDING STORIES

By continuing to use the site, you agree to the use of cookies. You can find out more by Tapping this link