சிவகார்த்திகேயனின் `டான்` படத்தின் Exclusive புகைப்படங்கள்!
அறிமுக இயக்குநர் சிபி சக்ரவர்த்தியின் இயக்கத்தில், சிவகார்த்திகேயன் ’டான்’ படத்தில் நடித்து வருகிறார்.
’டான்’ படத்தில் கதாநாயகியாக பிரியங்கா மோகன் நடித்துள்ளார். ‘குக் வித் கோமாளி’ சிவாங்கியும் இப்படத்தில் நடிக்கிறார்.
இப்படத்தில் எஸ்ஜே சூர்யா ஒரு நெகட்டிவ் ரோலில் நடிக்கிறார்.
சமுத்திரக்கனி சிவகார்த்திகேயனின் அப்பாவாக நடித்துள்ளார். இப்படத்திற்கு இசையமைக்கிறார் அனிருத்.
ஆர்ஜே விஜய், முனிஷ்காந்த், பால சரவணன், காளி வெங்கட் ஆகியோரும் டான் (Don) படத்தில் இடம்பெற்றுள்ளனர்.
இந்தப் படத்தில் சிவகார்த்திகேயன் கல்லூரி மாணவராக நடித்து வருகிறார். அடாது மழையிலும் விடாது டப்பிங் செய்து முடித்துள்ளதாக சமீபத்தில் தெரிவித்திருந்தார்.
கூடிய விரைவில் படத்தின் டிரெய்லர் வெளியாகும் என்று தகவல்கள் கிடைத்துள்ளது. அடுத்த வருடம் பிப்ரவரி மாதத்தில் DON படம் வெளியாகும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. சிவகார்த்தி நடிப்பில் உருவாகிவரும் அயலான் படமும் அடுத்த வருடம் வெளியாகும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.