2023 புத்தாண்டு ராசி பலன்: இந்த ராசிக்காரர்களுக்கு அதீத எச்சரிக்கை தேவை

Tue, 27 Dec 2022-8:32 am,

மேஷ ராசி: ஆண்டின் தொடக்கத்தில் கடின உழைப்பு தேவை. மறுபுறம், ஆரம்ப மாதம் மாணவர்களுக்கு சாதாரணமாக இருக்கும். ஆண்டின் நடுப்பகுதியில் சில தடைகள் ஏற்படலாம்.

 

ரிஷப ராசி: புத்தாண்டின் தொடக்கத்தில் சிறப்பாகச் செயல்படுவீர்கள். உயர்கல்விக்கான விருப்பத்தைத் தேடும் மாணவர்கள் இந்த ஆண்டு வெற்றி பெறுவார்கள், ஆனால் ஏப்ரல் மாதத்தில் மாணவர்கள் மன அழுத்தத்தை சந்திக்க நேரிடும்.

 

மிதுன ராசி: மிதுன ராசிக்காரர்களுக்கு புத்தாண்டில் நல்ல காலம் அமையும். வெளிநாட்டில் படிக்கும் மாணவர்களுக்கு இந்த ஆண்டு வெற்றி கிடைக்கும். இந்த ஆண்டு கடினமாக உழைக்க வேண்டியிருக்கும்.

 

கடக ராசி: கடக ராசிக்காரர்களுக்கு வரும் ஆண்டு சிறப்பாக இருக்கும். மாணவர்கள் வெளிநாட்டு கல்வி நிறுவனங்களில் சேர திட்டமிட்டால், இந்த ஆண்டு அவர்களின் கனவு நனவாகும். 

 

சிம்ம ராசி: சிம்ம ராசிக்காரர்களுக்கு இந்த வருடம் கலக்கலாக இருக்கும். வெளிநாடு சென்று கல்வி கற்க விரும்பும் மாணவர்களுக்கு இந்த ஆண்டு சிறப்பாக இருக்கும்.

 

கன்னி ராசி: 2023 ஆம் ஆண்டில், கன்னி ராசிக்காரர்கள் போட்டித் தேர்வுகளுக்குத் தயாராவதற்கு நல்ல நேரமாக அமையும். வெளிநாட்டில் படிக்க விரும்பும் மாணவர்களுக்கு செப்டம்பர் மாதத்தில் நல்ல செய்தி கிடைக்கும்.

 

துலாம் ராசி: ஆண்டின் தொடக்கத்தில் துலாம் ராசிக்காரர்கள் சில பிரச்சனைகளை சந்திக்க நேரிடும். உயர்கல்விக்கு தயாராகும் மாணவர்களுக்கு வரும் ஆண்டு சாதகமாக இருக்கும். நல்ல செய்தி வருவதற்கான வாய்ப்புகள் அதிகம்.

 

விருச்சிக ராசி: விருச்சிக ராசிக்காரர்களுக்கு 2023 புத்தாண்டு கல்வித் துறையில் சிறப்பாக அமையும். மாணவர்கள் உயர் கல்வி நிறுவனங்களில் சேர்க்கைக்கு திட்டமிட்டால் ஏப்ரல் மாதத்திற்கு முன்பே நல்ல முடிவுகள் கிடைக்கும். கடின உழைப்புக்கு ஏற்றவாறு வெற்றி பெறுவதற்கான அனைத்து வாய்ப்புகளும் அமையும்.

 

தனுசு ராசி: தனுசு ராசிக்காரர்களுக்கு இந்த ஆண்டு சவாலாக இருக்கலாம், வரும் புத்தாண்டில் கல்வித்துறையில் போராட்டத்தை சந்திக்க நேரிடலாம். 

 

மகர ராசி: 2023 புத்தாண்டு மகர ராசியினருக்கு கல்வியில் சிக்கல்கள் நிறைந்ததாக இருக்கும். கடினமாக உழைக்க வேண்டும். போட்டித் தேர்வுகளுக்குத் தயாராகும் மாணவர்கள் கடின உழைப்பால் வெற்றி பெறலாம். 

 

கும்ப ராசி: கும்ப ராசிக்காரர்கள் கடினமாக உழைக்க வேண்டும். போட்டித் தேர்வில் ஈடுபட்டுள்ள மாணவர்கள் 2023 ஆம் ஆண்டில் வெற்றி பெறுவார்கள்.

 

மீன ராசி: மீன ராசிக்காரர்கள் புத்தாண்டின் தொடக்கத்தில் இருந்து கடினமாக உழைக்க வேண்டும். இவ்வாறு செய்வதன் மூலம் இந்த வருடம் அவர்களுக்கு நல்ல பலன்கள் கிடைக்கும்.

ZEENEWS TRENDING STORIES

By continuing to use the site, you agree to the use of cookies. You can find out more by Tapping this link