உடல் எடை குறையணுமா... மூளை சுறுசுறுப்பாக இருக்கணுமா.. கொய்யாப்பழம் ஒன்றே போதும்!
முக்கியமாக உணவில் நார்ச்சத்து இல்லாததால் தான் மலச்சிக்கல் ஏற்படுகிறது. நார்ச்சத்து பெருங்குடலைத் சுத்தம் செய்து நச்சுக்களை நீக்கி, குடல் இயக்கத்தை எளிதாக்குகிறது. நார்ச்சத்து மிக அதிகம் உள்ள பழங்களில் கொய்யாவும் ஒன்று.
கொய்யாப்பழம் கூடுதலாக உடலிலுள்ள கெட்ட கொலஸ்ட்ராலைக் குறைக்கவும், நல்ல கொழுப்பின் அளவை அதிகரிக்கவும் உதவுகிறது. உடலில் கொலஸ்டராலின் அளவு குறைவதால் இதய நோய்கள் ஏற்படாமல் இருக்கிறது.
கொய்யா உடலின் வளர்சிதை மாற்றத்தை தூண்டி உடல் எடையை குறைக்க உதவுகிறது. கொய்யாப்பழத்தில் அதிகளவு நார்சத்து இருப்பதால், உடலின் நச்சுக்களையும் கொழுப்பையும் நீக்கி, உடல் எடை குறைய உதவுகிறது.
கொய்யாப்பழத்தின் நோய் எதிர்ப்பு சக்தியை அதிகரிக்கும் தன்மைக்கு, அதில் உள்ள வைட்டமின் சி முக்கிய காரணம். வைட்டமின் சி என்பது இயற்கையான ஆண்டிஹிஸ்டமைன் ஆகும், இது அழற்சி செயல்பாட்டின் போது வெளியிடப்படும் ஹிஸ்டமின்கள் எனப்படும் மூலக்கூறுகளின் அளவைக் குறைப்பதன் மூலம் சுவாச ஒவ்வாமைகளைக் கட்டுப்படுத்த உதவுகிறது.
மூளை ஆரோக்கியத்தை பராமரிக்க தேவையான அனைத்து வைட்டமின்களும் கொய்யாவில் காணப்படுகின்றன. அவற்றில் வைட்டமின் பி 3 மற்றும் வைட்டமின் பி 6 உள்ளன. இது மூளைக்கு இரத்த ஓட்டத்தை மேம்படுத்துகிறது மற்றும் உங்கள் நரம்புகளை தளர்த்தும்.
இரண்டு மிக முக்கியமான அம்சங்கள் கொய்யாவை நீரிழிவு நோயாளிகளுக்கு ஏற்ற பழமாக மாற்றுகிறது. முதலாவதாக, இது நார்ச்சத்து நிறைந்தது, இரண்டாவதாக, இது மிகக் குறைந்த கிளைசெமிக் குறியீட்டைக் கொண்டுள்ளது. இரத்தத்தில் குளுக்கோஸ் அளவைக் கட்டுப்படுத்த இந்த இரண்டு பண்புகளும் தேவை.
கொய்யாப் பழத்தில் உள்ள வைட்டமின் ஏ கண்பார்வையைப் பராமரிக்கவும், கண்புரை மற்றும் மாகுலர் சிதைவு ஏற்படுவதையும் தடுக்கிறது.