இந்தியாவில் நீங்கள் கண்டிப்பாக பார்க்க வேண்டிய மிக அழகான 5 கோயில்கள்!
உத்தரகண்ட் மாநிலத்தில் உள்ள கேதார்நாத் கோயில் சிவபெருமானுக்கு அர்ப்பணிக்கப்பட்ட ஒரு புனிதமான கோயிலாகும். இமயமலையில் பிரம்மாண்டமாக இந்த இடம் அமைந்திருக்கிறது, கோயிலைச் சுற்றியுள்ள கண்ணை கவரும் காட்சிகள் பல அமைந்து இந்த கோயில் மிக அழகாக காட்சியளிக்கிறது.
தஞ்சாவூரில் உள்ள பிரகதீஸ்வரர் கோயில், யுனெஸ்கோவின் உலக பாரம்பரிய சின்னமாகவும், இந்தியாவின் மிக சிறப்பான கட்டுமானம் மற்றும் அழகான கோயில்களில் ஒன்றாக திகழ்கிறது. சோழர்களின் கட்டிடக்கலைக்கு சிறந்த எடுத்துக்காட்டாக விளங்கும் இந்த கோயில் பிரமிக்க வைக்கும் கட்டிடக்கலை மற்றும் நுணுக்கமான வேலைப்பாடுகளுடன் அழகாக காட்சியளிக்கிறது.
பஞ்சாப் மாநிலம் அமிர்தசரஸில் உள்ள பொற்கோயில் மிகவும் பிரபலமான இடமாகும். தங்க முலாம் பூசப்பட்ட வெளிப்புறம், அமைதியான ஏரி மற்றும் அமைதியான சூழ்நிலை போன்ற சிறப்புகளை கொண்டு இந்த கோயில் இந்தியாவின் மிக அழகான கோவில்களில் ஒன்றாக அமைந்துள்ளது.
மதுரையில் அமைந்துள்ள மீனாட்சி அம்மன் கோயில் பெரிய பரப்பளவை கொண்டுள்ளது. கோவிலின் உயரமான கோபுரங்கள், நுணுக்கமான வேலைப்பாடுகள், கண்ணை கவரும் விதத்தில் வர்ண பூச்சுகள் போன்று கோயில் அழகாக காட்சியளிக்கிறது.
ஒடிசாவின் கோனார்க்கில் உள்ள சூரியக் கோயில், சூரியனுக்கு அர்ப்பணிக்கப்பட்ட ஒரு அற்புதமான கோயிலாகும். இந்த கோவில் அழகாகி செதுக்கப்பட்டடு, யுனெஸ்கோவின் உலக பாரம்பரிய சின்னமாக எடுத்துக்கொள்ளப்பட்டு இந்தியாவின் மிக அழகான கோவில்களில் ஒன்றாக திகழ்கிறது.