இணைய திசையெங்கும் திரிஷா... திரிஷா! திடீர் டிரெண்டிங்கின் பின்னணி
திரிஷா திரைத்துறைக்கு வந்து 20 ஆண்டுகள் ஆனதையொட்டி ரசிகர்கள் அவருக்கு வாழ்த்துகளை தெரிவித்து வருகின்றனர்.
அமீர் இயக்குநராக அறிமுகமான மௌனம் பேசிய படத்தில் திரிஷாவும் முதன்முறையாக லீட் ரோலில் நடித்தார்.
அந்த படத்திற்குப் பிறகு திரிஷாவுக்கு கிடைத்த படங்கள் எல்லாமே ஏறுமுகம் தான். ஆறு, சாமி, கில்லி என வரிசையாக ஹிட் படங்களில் நடித்தார்.
கில்லியில் சொல்லியடித்த திரிஷா, அப்படி போடு பாடலுக்கு விஜய்யுடன் குத்தாட்டம் போட்டு அசரடித்தார்.
படிப்படியாக திரைத்துறையில் முன்னேறிய திரிஷா 20 ஆண்டுகளுக்குப் பிறகும் தென்னிந்தியாவின் முன்னணி நடிகையாக உயர்ந்து இருக்கிறார். கடைசியாக திரிஷா நடித்த பொன்னியின் செல்வன் படமும் செம ஹிட் அடித்தது. இதில் இவருடைய நடிப்பு பாராட்டுகளை பெற்றது.