விபரீத ராஜயோகம்: புதன் வக்ர நிலையால் இந்த ராசிகளின் தலைவிதி மாறும், வெற்றிகள் கூடும்
புதன் கிரகம்: புதன் கிரகம் புத்திசாலித்தனம், தர்க்கம், உரையாடல், வணிகம் ஆகியவற்றின் காரணியாக உள்ளார். ஆகையால், புதனின் ராசி மாற்றம் மக்களின் வேலை-தொழில், பேச்சு, பொருளாதார நிலை ஆகியவற்றில் பெரும் தாக்கத்தை ஏற்படுத்துகிறது.
புதன் வக்ர பெயர்ச்சி: தற்போது புதன் சிம்மத்தில் உள்ளார். அவர் வக்ர நிலையில் உள்ளார். புதன் 24 ஆகஸ்ட் 2023 இலிருந்து வக்ர நிலையில் சஞ்சரித்து வருகிறார்.
விபரீத ராஜயோகம்: புதனின் வக்ர பெயர்ச்சி காரணமாக மகா விபரீத ராஜயோகம் உருவாகியுள்ளது. இந்த ராஜயோகம் ஜோதிடத்தில் மிகவும் மங்களகரமானதாக கருதப்படுகிறது. மகா விபரீத ராஜயோகத்தின் தாக்கம் அனைத்து ராசிகளிலும் இருக்கும்.
ராசிகளில் தாக்கம்: புதன் வக்ர பெயர்ச்சியால் உருவாகும் மகா விபரீத ராஜயோகத்தின் தாக்கம் அனைத்து ராசிகளிலும் இருக்கும். எனினும் சில ராசிக்காரர்களுக்கு இது அபரிமிதமான நற்பலன்களை அள்ளித்தரும். சொத்து, லாட்டரி, முதலீடு ஆகியவற்றாலும் ஆதாயம் கிடைக்கும்.
மிதுனம்: புதன் மிதுன ராசிக்கு அதிபதி ஆவார். இந்த ராசிக்காரர்களுக்கு புதனின் வக்ர பெயர்ச்சி மிகுந்த பலன்களைத் தரும். பண வரவு அதிகரிக்கும். வருமானம் கூடும். லாபம் அதிகரிக்கும். லாட்டரி, பங்குச் சந்தையில் பணத்தை முதலீடு செய்யலாம்.
கன்னி: புதனின் வக்ர இயக்கத்தால் உருவான மகா விபரீத ராஜயோகம் கன்னி ராசிக்காரர்களுக்கு சாதகமாக அமையும். தொழிலில் ஆதாயம் அடைவீர்கள். தொழில்-வியாபாரத்தில் முன்னேற்றம் ஏற்படும். உங்கள் வருமானம் கூடும். பொருட்கள், பங்குச் சந்தை, தங்கம்-வெள்ளி மற்றும் சொத்து வியாபாரத்தில் தொடர்புடையவர்களுக்கு, இந்த நேரம் குறிப்பாக நன்மை பயக்கும். லாபம் அதிகரிக்கும்.
மகரம்: வக்ர புதனால் உருவாகும் மகா விபரீத ராஜயோகம் மகர ராசிக்காரர்களுக்கு சுப பலன்களைத் தரும். இவர்களுக்கு அதிர்ஷ்டம் சாதகமாக இருக்கும். உங்கள் பெரிய ஆசைகள் ஆனித்தும் நிறைவேறும். வியாபாரம் நன்றாக நடக்கும். லாபம் அதிகரிக்கும். பெரிய பண ஆதாயம் இருக்கலாம், இது உங்கள் நிதி நிலையை பலப்படுத்தும்.
பொறுப்பு துறப்பு: இங்கே கொடுக்கப்பட்டுள்ள தகவல்கள் பொதுவான நம்பிக்கைகள் மற்றும் தகவல்களின் அடிப்படையில் அமைந்துள்ளன. ஜீ மீடியா இந்த தகவல்களை உறுதிப்படுத்தவில்லை.