இந்தியாவின் முதல் Finance Minister சண்முகம் செட்டி முதல் நிர்மலா சீதாராமன் வரை...

Mon, 01 Feb 2021-1:03 am,

பட்ஜெட் முதன்முதலில் இந்தியாவில் 1860 ஏப்ரல் 7ஆம் தேதியன்று அறிமுகப்படுத்தப்பட்டது. 1869 பிப்ரவரி 18ஆம் தேதியன்று ஜேம்ஸ் வில்சன் வழங்கினார். அவர் இந்திய கவுன்சிலின் நிதி உறுப்பினராக இருந்தார்.

சுதந்திர இந்தியாவின் முதல் மத்திய பட்ஜெட்டை 1947 நவம்பர் 26ஆம் தேதியன்று முதல் நிதியமைச்சர் ஆர்.கே.சண்முகம் செட்டி வழங்கினார்.

இந்தியாவின் முதல் பிரதமர் ஜவஹர்லால் நேரு, நிதியமைச்சராக பொறுப்பு வகித்தபோது, பட்ஜெட் தாக்கல் செய்திருக்கிறார்.

இந்தியாவின் முதல் பெண் நிதியமைச்சர் இந்திரா காந்தி. அரை நூற்றாண்டுக்கு முன்னர் இந்திரா காந்தி நிதி அமைச்சராக பட்ஜெட் தாக்கல் செய்தார்.  

ஒரே குடும்பத்தை சேர்ந்த மூன்று பேர் நிதியமைச்சராக பட்ஜெட் தாக்கல் செய்திருக்கின்றனர். தாத்தா ஜவஹர்லால் நேரு, அன்னை இந்திரா காந்தி, மகன் ராஜீவ் காந்தி என மூன்று தலைமுறையினர் இந்திய நாடாளுமன்றத்தில் பட்ஜெட் தாக்கல் செய்துள்ளனர்

இந்திய நிதியமைச்சர்களில் அதிக பட்ஜெட்களை தாக்கல் செய்த பெருமைக்குரியவர் மொரார்ஜி தேசாய்

 

சி. சுப்பிரமணியம்  என்று அறியப்படும் சிதம்பரம் சுப்பிரமணியம்  இந்திரா காந்தி அமைச்சரவையில் நிதி அமைச்சராக பணியாற்றினார். தமிழகத்தை சேர்ந்த மற்றுமொரு நிதியமைச்சர்

முன்னாள் குடியரசுத் தலைவரும், தமிழகத்தை சேர்ந்தவருமான ஆர்.வெங்கட்ராமன் நிதியமைச்சராக மத்திய பட்ஜெட்டை தாக்கல் செய்துள்ளார்

 

முன்னாள் குடியரசுத் தலைவர் பிரணாப் முகர்ஜி அவர்கள். இந்தியாவின் நிதியமைச்சராக பணியாற்றியிருக்கிறார். காங்கிரஸ் கட்சியைச் சேர்ந்த பிரணாப் முகர்ஜி அவர்கள் 2009–2012 முதல் நிதியமைச்சராக பட்ஜெட் தாக்கல் செய்துள்ளார் 

முன்னாள் பிரதமர் மன்மோகன் சிங் (Manmohan Singh) இந்திய நிதியமைச்சராக பட்ஜெட் தாக்கல் செய்திருக்கிறார்

மத்திய நிதி அமைச்சராக இதுவரை 8 பட்ஜெட்களையும்,1 இடைக்கால பட்ஜெட்டையும் ப.சிதம்பரம் அவர்கள் தாக்கல் செய்துள்ளார். மொரார்ஜி தேசாய்க்கு அடுத்து அதிக பட்ஜெட்களைத் தாக்கல் செய்தவர் என்ற பெருமையைப் பெற்றுள்ளார்.

மறைந்த பாஜக தலைவரும், பல்வேறு அமைச்சகப் பொறுப்புகளையும் கையாண்ட அருண் ஜெட்லி நிதியமைச்சராக பட்ஜெட் தாக்கல் செய்துள்ளார்.

தற்போதைய நிதி அமைச்சர் நிர்மலா சீதாராமன் வர்த்தகத்துறை மற்றும் தொழில்துறை மற்றும் பாதுகாப்புத்துறை அமைச்சராக இருந்தார். இந்தியாவின் முழுநேர பெண் நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் தான். அரை நூற்றாண்டுக்கு முன்னர் இந்திரா காந்தி நிதி அமைச்சராக பட்ஜெட் தாக்கல் செய்தார் என்றாலும், அப்போது அவர் பிரதமராகவும் இருந்தார்.  

ZEENEWS TRENDING STORIES

By continuing to use the site, you agree to the use of cookies. You can find out more by Tapping this link