நரை முடி கருக்க இந்த இயற்கை வீட்டு வைத்தியத்தை ட்ரை பண்ணுங்க
நரை முடிக்கு ஆயுர்வேத சிகிச்சை இளம் வயதில் வெள்ளை முடிக்கு ஆயுர்வேத சிகிச்சையை நீங்கள் தேடுகிறீர்களானால், நீங்கள் ஆளி விதையை முயற்சி செய்யலாம், ஏனெனில் இது உங்களுக்கு லாபகரமான ரிசல்ட்டை பெற்று தரும். முடி பராமரிப்புக்கு இந்த விதாயை எவ்வாறு பயன்படுத்தலாம் என்பதை இங்கே தெரிந்துக்கொள்ளுங்கள்.
ஆளி விதை ஏன் முக்கியமானது ஆளி விதையில் புரதம், நார்ச்சத்து, வைட்டமின்கள், மேக்ரோநியூட்ரியண்ட்ஸ் மற்றும் ஒமேகா-3 கொழுப்பு அமிலங்கள் நிறைந்துள்ளன. அவற்றை சாலட் அல்லது ஸ்மூத்திகளில் சேர்த்து சாப்பிடலாம். அதேபோல் முடியின் அடிப்படையில் ஆளிவிதை ஒரு சிறப்பு உணவை விட குறைந்தது இல்லை என்றே கூறலாம். இதன் காரணமாக உச்சந்தலையில் ஈரப்பதம் ஏற்பட்டு கூந்தல் பளபளப்பாகும்.
ஆளிவிதை முடி மாஸ்க்: எப்படி பயன்படுத்துவது என்று பார்ப்போம் நீங்கள் ஆளிவிதையின் ஹேர் மாஸ்க்கை தயார் செய்து, தலைமுடியில் தடவி உலரும் வரை காத்திருந்து, பின்னர் சுத்தமான தண்ணீரில் கொண்டு தலை முடியை கழுவவும். இப்படி தொடர்ந்து செய்து வந்தால், சில நாட்களில் வெள்ளை முடி மீண்டும் கருப்பாக மாற ஆரம்பிக்கும்.
ஆளி விதை ஹேர் மாஸ்க் செய்வது எப்படி ஆளி விதையால் கொண்ட ஹேர் மாஸ்க் செய்ய நான்கு கப் தண்ணீரில் ஒரு கப் ஆளிவிதைகளை எடுத்துக்கொள்ளவும், இப்போது அவற்றை நன்கு கொதிக்கவைத்து, விதைகளை பருத்தி துணியில் போர்த்தி பிழியவும். இப்போது அதில் ஒரு ஸ்பூன் தேங்காய் எண்ணெய் மற்றும் கற்றாழை ஜெல்லை கலந்து பயன்படுத்தவும்.