பெரிய தொப்பையை சீக்கிரமாக சின்னதாக்க..படுத்துக்கொண்டே செய்யக்கூடிய உடற்பயிற்சிகள்!
தொப்பையை குறைக்கும் ஃப்லோர் உடற்பயிற்சிகள். லிஸ்டை இங்கு பார்க்கலாம்..
ரஷ்ஷியன் ட்விஸ்ட்ஸ்:
அடிவயிற்று தொப்பை மற்றும் கை தசைகளை குறைப்பதற்கு இந்த உடற்பயிற்சிகளை செய்யலாம். இதை செய்ய, முதலில் தரையில் உட்கார்ந்து கொள்ள வேண்டும். கால்களை தரையில் வைக்காமல், கைகளை இரு பக்கங்களிலும் திருப்ப வேண்டும்.
ப்ளாங்க்:
மிக குறுகிய நேரம் செய்தாலும் நிறைய கலோரிகளை குறைக்கும் உடற்பயிற்சிகளுள் இதுவும் ஒன்று. வயிற்று பகுதியில் இருக்கும் அதிக தசைகளையும், தோள்பட்டையை வலுவாக்கவும் இந்த உடற்பயிற்சிகள் உதவும்.
லெக் ரைசஸ்:
இந்த உடற்பயிற்சியை படுத்துக்கொண்டும் செய்யலாம். இது, அடிவயிற்று பகுதியில் இருக்கும் தசைகளை குறைக்க உதவும். காலை 90 டிகிரி வரை தூக்கி, எதையும் பிடிக்காமல் உங்கள் அடி வயிற்றில் அழுத்தும் கொடுத்து கீழே வைக்க வேண்டும்.
க்ரஞ்சஸ்:
தசைகளை வளர்க்க உதவும் உடற்பயிற்சிகளுள் ஒன்று, Crunches. இதில் பல வகைகள் இருக்கின்றன. உள் தசைகளில் கவனம் செலுத்துகிறது, இந்த உடற்பயிற்சி.
க்ராப் வாக்:
இது, ஒரு முழு உடல் உடற்பயிற்சியாகும். உடலை ஃப்ளெக்ஸிபில் ஆக வைத்துக்கொள்ள இந்த உடற்பயிர்சிகளை செய்யலாம். இது, தோள்பட்டையை வலுவாக்கவும் உதவும்.
பை சைக்கிள் க்ரஞ்சஸ்:
உடலின் நடுப்பகுதியை ஒல்லியாக்கும் உடற்பயிற்சிகளுள் ஒன்று, பை சைக்கிள் க்ரஞ்சஸ். கால்கள், கைகள் மற்றும் இடுப்பின் இரு பக்கங்கள் ஆகியவை இதனால் தொப்பை விரைவில் குறையலாம் என கூறப்படுகிறது.
கோப்ரா போஸ்:
உடற்பயிற்சிகள் முடிந்த பின்னர், உடலை ஸ்ட்ரெட்சிங் செய்வதற்காக இந்த உடற்பயிற்சியை செய்யலாம்.
(பொறுப்பு துறப்பு: அன்புள்ள வாசகரே, எங்கள் செய்திகளைப் படித்ததற்கு நன்றி. இந்தச் செய்தி உங்களுக்கு பல தகவல்களை வழங்குவதற்காக மட்டுமே எழுதப்பட்டுள்ளது. இதை எழுதுவதில் வீட்டு வைத்தியம் மற்றும் பொதுவான தகவல்களின் உதவியை நாங்கள் பெற்றுள்ளோம். இவற்றை பின்பற்றுவதற்கு முன் கண்டிப்பாக மருத்துவ ஆலோசனையைப் பெற வேண்டும். ஜீ மீடியா இந்த தகவல்களை உறுதிப்படுத்தவில்லை.)