Tips to sleep better: இரவில் நன்றாக தூங்க இத செய்யுங்க
சிலர் படுக்கைக்குச் செல்வதற்கு முன் தங்கள் எல்லா பிரச்சனைகளையும் பற்றி சிந்திக்கத் தொடங்குவார்கள். இதனால் சரியாக தூங்குவது கடினம். எனவே படுக்கைக்குச் செல்வதற்கு முன் உங்கள் பிரச்சனைகளையும் பற்றி யோசிப்பதை நிறுத்தவும்.
படுக்கைக்குச் செல்வதற்கு முன் உடல் வெப்பநிலையை சரிசெய்துக்கொள்ளவும். இதனுடன் படுக்கைக்குச் செல்வதற்கு முன் உங்கள் அறை வெப்பநிலையை சரிசெய்யவும். படுக்கையறையில் வெப்பநிலை குறைவாகவோ அல்லது அதிகமாகவோ இருந்தால் உங்கள் தூக்கத்தின் தரத்தை பாதிக்கும்.
உறங்கும் முன் வெந்நீரில் குளிப்பதால் மன நிம்மதியாக இருக்கும். இது மன அழுத்தத்தை குறைக்க உதவும். சில ஆய்வுகளின்படி, தூங்கும் முன் வெதுவெதுப்பான நீரில் குளிப்பது தூக்கத்தின் தரத்தை மேம்படுத்தும் என்று கூறப்பட்டுள்ளது.
செல்போன், டிவி, லேப்டாப் போன்றவற்றின் வெளிச்சம் தூக்கத்தை கெடுக்கும். எனவே தூங்குவதற்கு அரை மணி நேரத்திற்கு முன் அவற்றை அணைத்துவிடவும்.
(பொறுப்பு துறப்பு: இங்கே கொடுக்கப்பட்டுள்ள தகவல்கள் வீட்டு வைத்தியம் மற்றும் பொதுவான தகவல்களை அடிப்படையாகக் கொண்டது. அதை ஏற்றுக்கொள்வதற்கு முன், கண்டிப்பாக மருத்துவ ஆலோசனையைப் பெறுங்கள். ZEE NEWS இதை உறுதிப்படுத்தவில்லை.)