ஆண்மையை அதிகரிக்கும் `டெஸ்டோஸ்டிரோன்` ஹார்மோன் நிறைந்த ‘சில’ உணவுகள்!

Wed, 14 Dec 2022-10:55 pm,

இயற்கையான புரதச்சத்து நிறைந்த பொருட்களை உட்கொள்வதால்  டெஸ்டோஸ்டிரோன்  ஹார்மோனை அதிகரிக்கும். முட்டை, பன்னீர், வேகவைத்த கோழிக்கறி, கடலை வெண்ணெய், வேகவைத்த பீன்ஸ், ப்ரோக்கோலி என அனைத்துமே புரதச்சத்து நிறைந்த ஆதாரங்கள். இவை கட்டாயம் உங்கள் டயட்டில் இருக்கட்டும்.

அவகேடோ சாப்பிடுவதால் டெஸ்டோஸ்டிரோன்  ஹார்மோன் அதிகரிப்பதோடு, நமது இதயம் ஆரோக்கியமாக இருக்கும். செரிமானத்தை மேம்படுத்துகிறது மற்றும் புற்றுநோய் போன்ற நோய்களைக் குறைக்க உதவுகிறது.

மூலிகை தேநீர்: டெஸ்டோஸ்டிரோன்  ஹார்மோன்களை அதிகரிக்கும் மூலிகைகள் மற்றும் உணவுகளை டயட்டில் சேர்த்துக் கொள்ள வேண்டும். கிரீன் போன்றவையும் நல்ல பலன் கொடுக்கும். ஆரோக்கியமான ஹார்மோன் மாற்றம் காரணமாக ஆண்மை அதிகரித்து மண வாழ்க்கை மகிழ்ச்சியாக இருக்கும்.

காலையில் எழுந்த பிறகு நிறைய தண்ணீர் குடிக்க வேண்டும். இதைச் செய்வதன் மூலம், உங்கள் உடலில் உள்ள அனைத்து நச்சுகளும் எளிதில் அகற்றப்படும். இது ஆற்றலை அதிகரிக்கும்

(பொறுப்பு துறப்பு: இங்கே கொடுக்கப்பட்டுள்ள தகவல்கள் வீட்டு வைத்தியம் மற்றும் பொதுவான தகவல்களை அடிப்படையாகக் கொண்டது. அதை ஏற்றுக்கொள்ளும் முன், கண்டிப்பாக மருத்துவ ஆலோசனையைப் பெறவும். ZEE NEWS இதற்கு பொறுபேற்காது.)

ZEENEWS TRENDING STORIES

By continuing to use the site, you agree to the use of cookies. You can find out more by Tapping this link