எடுப்பான மார்பகம் வேண்டுமா.. டயட்டில் சேர்க்க வேண்டியவை..!!
பெண்ணிற்கு அழகையும் கவர்ச்சியையும் கொடுக்கும் மார்பகங்களின் வளர்ச்சி சீராக இருக்க, நமது உணவுப் பழக்க வழக்கத்தில் கவனம் செலுத்துவது அவசியம். சில பெண்களுக்கு இயற்கையாகவே செய்ய மார்பகங்கள் இருக்கலாம். இது அவர்களது தன்னம்பிக்கையை பாதிக்கக்கூடும். இந்நிலையில் மார்பக அளவை அதிகரிக்க உணவுகளை அறிந்து கொள்ளலாம்.
நட்ஸ் வகைகள்: உலர் பழங்கள் என்னும் நட்ஸ் வகைகளில் ஆரோக்கியமான கொழுப்பு அமிலங்கள் மற்றும் புரதங்கள் நிறைந்துள்ளன. இவை மார்பக வளர்ச்சிக்கு மிகவும் அத்தியாவசியமான ஊட்டச்சத்து. எனவே உணவில் பாதாம், வாதமைப்பருப்பு முந்திரி, வேர்க்கடலை போன்றவற்றை தாராளமாக சேர்த்துக் கொள்ள வேண்டும்.
மீன் உணவுகள் குறிப்பாக இறால் சிப்பி மற்றும் கடல்பாசி போன்றவை, உடலில் உள்ள பாலியல் ஹார்மோன்களை அதிகரிக்கச் செய்து, மார்பக அளவை அதிகரிக்க உதவுகிறது. எனவே டயட்டில் கடல் உணவுகள் அவசியம் இருக்கட்டும்.
பால்: புரதச்சத்து மிக்க பாலில் மார்பகங்களின் அளவையும் வடிவத்தையும் அதிகரிக்க உதவுm, புரோஜெஸ்ட்டிரோன், ஈஸ்ட்ரோஜன் மற்றும் ப்ரோலாக்டின் உள்ளது. மனித உடலில் உள்ள அதே இனப்பெருக்க ஹார்மோன்கள் பாலில் உள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.
பூசணி விதைகளில் ஆரோக்கியமான கொழுப்புடன், புரதம், கால்சியம், மெக்னீசியம் மற்றும் பொட்டாசியம் போன்ற பல ஊட்டச்சத்துக்களும் உள்ளன. பூசணி விதைகள் உடலில் கொழுப்பின் அளவை அதிகரித்து மார்பக வளர்ச்சியை அதிகரிக்கின்றன. எனவே, பூசணி விதைகளை உங்கள் உணவில் சேர்த்துக் கொள்ளுங்கள்.
பச்சை காய்கறிகள்: எண்ணற்ற ஊட்டசத்துக்களுடன் அதிக அளவு புரதம் மற்றும் இரும்புச்சத்து நிறைந்த பச்சைக்காய்கறிகள், குறிப்பாக முட்டைக்கோஸ் மற்றும் கீரை போன்ற காய்கறிகள் மார்பக வளர்ச்சியை ஊக்குவிப்பது மட்டுமின்றி தசை வளர்ச்சிக்கும் உதவுகிறது.
ஐஸ் கட்டி மசாஜ்: உணவில் கவனம் செலுத்துவதுடன் மார்பகங்களை ஐஸ் கட்டிகளைக் கொண்டு மசாஜ் செய்வது நல்ல பலனைக் கொடுக்கும். ஓரிரு ஐஸ் கட்டிகளை எடுத்து மார்பைச் சுற்றி 1-2 நிமிடங்கள் வட்ட வடிவில் மசாஜ் செய்வதால், மார்பக தசைகளை இறுகுவதுடன், வளர்ச்சிக்கும் உதவும்
பொறுப்பு துறப்பு: இங்கே கொடுக்கப்பட்டுள்ள தகவல்கள் வீட்டு வைத்தியம் மற்றும் பொதுவான தகவல்களை அடிப்படையாகக் கொண்டவை. இவற்றை பின்பற்றுவதற்கு முன் கண்டிப்பாக மருத்துவ ஆலோசனையைப் பெற வேண்டும். ZEE MEDIA இந்த தகவல்களுக்கு பொறுப்பேற்காது.