வெறும் வயிற்றில் ‘இந்த’ உணவுகளை சாப்பிடவே கூடாது! என்னென்ன தெரியுமா?
காலையில் நாம் சில உணவுகளை மறந்தும் கூட சாப்பிடக்கூடாத உணவுகள் சில இருக்கின்றன. அவை என்னென்ன தெரியுமா?
தக்காளி:
தக்காளி, அமிலத்தன்மை நிறைந்த உணவு பொருட்களுள் ஒன்றாக இருக்கிறது. இதனை வெறும் வயிற்றில் சாப்பிட்டால் எரிச்சல் ஏற்படும் என கூறப்படுகிறது.
சர்க்கரை உணவுகள்:
அதிக சர்க்கரை நிறைந்த உணவுகளை நாம் காலையில் வெறும் வயிற்றில் சாப்பிடுவதால், அது ரத்தத்தில் உடனடியாக சர்க்கரை அளவை அதிகரிக்கும் என கூறப்படுகிறது. இதனால், இன்சுலின் எதிர்ப்பு திறனும் அதிகரிக்குமாம்.
காரமான உணவுகள்:
காரமான உணவுகளை சாப்பிடும் போது, வயிற்றில் எரிச்சல் உண்டாகலாம். இதனால், ஆசிட் ரீஃப்ளக்ஸ் மற்றும் செரிமான பிரச்சனைகள் உருவாகலாம். அல்சர் பாதிப்புகளை ஏற்படுத்தவும் வாய்ப்பிருக்கிறது.
சோடா:
சோடா மற்றும் கார்பனேற்றம் அதிகம் நிறைந்த பானங்களை காலையில் சாப்பிடும் போது அது வயிறு உப்பசம் மற்றும் அசௌகரியத்தை உருவாக்க வழிவகுக்கலாம். இதனால், வயிற்றில் அமில உற்பத்தியும் அதிகமாகும்.
தயிர்:
தயிர் ஆரோக்கியமான உணவாக கருதப்பட்டாலும், இதை வெறும் வயிற்றில் சாப்பிட்டால் அசௌகரியம் ஏற்படும். இதன் காரணமாக வயிற்றில் பல்வேறு பிரச்சனைகள் உண்டாகலாம்.
காபி:
காலையில் காபி குடிப்பது, வயிற்றில் பித்தத்தை ஏற்படுத்தும் என பெரியவர்கள் கூறி கேட்டிருப்போம்.உண்மையில், இதை வெறும் வயிற்றில் குடித்தால் நெஞ்செரிச்சல், கேஸ்டிரிட்டிஸ் போன்ற பாதிப்புகள் ஏற்படலாம். எனவே ஏதாவது சாப்பிட்ட பிறகு காபி குடிக்கலாம் என கூறப்படுகிறது.
சிட்ரஸ் பழங்கள்:
சிட்ரஸ் பழங்களான சாத்துக்குடி, எலுமிச்சை மற்றும் ஆரஞ்சு போன்ற பழங்களில் அதிகப்படியான அமிலத்தன்மை இருப்பதாக கூறப்படுகிறது. இது பின்னாளில் அல்சர் உள்பட சில பாதிப்புகளை ஏற்படுத்தலாம்.
(பொறுப்பு துறப்பு: இந்தச் செய்தி உங்களுக்கு பல தகவல்களை வழங்குவதற்காக மட்டுமே எழுதப்பட்டுள்ளது. இதை எழுதுவதில் வீட்டு வைத்தியம் மற்றும் பொதுவான தகவல்களின் உதவியை நாங்கள் பெற்றுள்ளோம். இவற்றை பின்பற்றுவதற்கு முன் கண்டிப்பாக மருத்துவ ஆலோசனையைப் பெற வேண்டும். ஜீ மீடியா இந்த தகவல்களை உறுதிப்படுத்தவில்லை.)