வங்கிக் கணக்கில் க்ளைம் செய்யப்படாத தொகையை எப்படி வாங்குவது? ஆர்பிஐ விளக்கம்...

Thu, 07 Mar 2024-3:09 pm,

அனைத்து வங்கிகளும் UDGAM இன் பகுதியாக உள்ளதா?

இல்லை, 2024 மார்ச் 6ம் தேதி நிலவரப்படி, UDGAM போர்ட்டலில் 30 வங்கிகள் உள்ளன. ரிசர்வ் வங்கியின் டெபாசிட்டர் கல்வி மற்றும் விழிப்புணர்வு (DEA) ஃபண்டில் உள்ள கோரப்படாத டெபாசிட்டுகளில் (மதிப்பு அடிப்படையில்) சுமார் 90% இந்த வங்கிகளுடையது

கோரப்படாத தொகையை இந்த போர்டல் மூலமாகவோ அல்லது ரிசர்வ் வங்கி மூலமாகவோ செட்டில் செய்ய முடியுமா?

இல்லை, பல வங்கிகளில் உள்ள கோரப்படாத டெபாசிட்கள்/கணக்குகளை ஒரே இடத்தில் தேடுவதற்கு இந்த போர்டல் எளிதாக்குகிறது. ஒவ்வொரு வங்கியின் க்ளைம் செயல்முறை பற்றிய தகவலையும் இது வழங்குகிறது. கோரப்படாத வைப்புத் தொகையை சம்பந்தப்பட்ட வங்கியிடம் இருந்து மட்டுமே கோர முடியும்.

கோரப்படாத வைப்புகளைத் தேடுவதற்கு என்ன தகவல்கள் தேவை?

கோரப்படாத டெபாசிட்களைத் தேட, பயனர் கணக்கு வைத்திருப்பவரின் பெயர், வங்கிப் பெயர் தேவை. இவற்றித் தவிர, பான் அட்டை, ஓட்டுநர் உரிமம், வாக்காளர் ஐடி, பாஸ்போர்ட் எண் மற்றும் பிறந்த தேதி ஆகியவை தேவை

Core Banking Solution (CBS) என்றால் என்ன?

கோர் பேங்கிங் சொல்யூஷன் (CBS) மூலம் வங்கிகளால் உருவாக்கப்பட்ட ஒரு தனிப்பட்ட எண்ணாகும், மேலும் RBI இன் DEA நிதிக்கு மாற்றப்படும் ஒவ்வொரு உரிமை கோரப்படாத கணக்கு/டெபாசிட்டுக்கும் ஒதுக்கப்படும்.

UDGAM போர்ட்டலில் எந்த டெபாசிட்கள்/கணக்குகளை தேடலாம்?

ரிசர்வ் வங்கியின் DEA நிதியின் ஒரு பகுதியாக இருக்கும் அனைத்து உரிமை கோரப்படாத டெபாசிட்கள்/கணக்குகள் UDGAM போர்ட்டலில் தேடலாம்.

DEA நிதியில் எவ்வளவு தொகை டெபாசிட் செய்யப்படுகிறது?

DEA நிதிக்கு வரவு வைக்கப்படும் தொகையானது வங்கிகளில் பராமரிக்கப்படும் எந்தவொரு வைப்புத்தொகை கணக்கிலும் உள்ள கிரெடிட் இருப்பு ஆகும். 10 ஆண்டுகள் அல்லது அதற்கும் மேலாக இயக்கப்படாத கணக்குகள், 10 ஆண்டுகள் அல்லது அதற்கு மேல் உரிமை கோரப்படாமல் உள்ள தொகை இந்த கணக்கில் சேர்க்கப்படும்.

DEA நிதியில் சேமிப்பு வங்கி கணக்கு, நிலையான வைப்பு (FD), தொடர் வைப்பு (RD), நடப்பு வைப்பு, மற்ற வைப்பு, பணக் கடன் ஆகியவை அடங்கும்

DEA நிதியில் தொகை எப்போது டெபாசிட் செய்யப்படுகிறது?

வங்கிகள் தொடர்ந்து செயலற்ற நிலையில் 10 ஆண்டுகள் நிறைவடைந்ததைத் தொடர்ந்து மாதத்தின் கடைசி வேலை நாளில் கணக்குகளில் உள்ள கிரெடிட் நிலுவையை DEA நிதிக்கு மாற்ற வேண்டும்.

ZEENEWS TRENDING STORIES

By continuing to use the site, you agree to the use of cookies. You can find out more by Tapping this link