சுகர் லெவல் முதல் வெயிட் லாஸ் வரை... வெறும் வயிற்றில் இஞ்சி நீர் ஒன்றே போதும்...!
காலையில் காபி - டீக்கு பதிலாக தினமும் ஒரு சிறிய அளவில் இஞ்சி பானம் அருந்துவதன் மூலம் அன்றைய தினத்தை தொடங்கினால், அதன் மூலம் கிடைக்கும் நன்மைகள் ஏராளம். உடல் எடையை குறைப்பது மட்டுமின்றி, பல நோய்களில் இருந்தும் இந்த இஞ்சி பானம் நிவாரணம் அளிக்கும்.
வளர்சிதை மாற்றம்: உடல் ஆரோக்கியமாக இருக்க வளர்சிதை மாற்றம் அவசியம். வளர்சிதை மாற்ற விகிதத்தை அதிகரிக்க இஞ்சி உதவுகிறது என்று பல ஆய்வுகள் தெரிவிக்கின்றன. இதன் காரணமாக உடல் எடை இழப்பு எளிதாகிறது.
கொலஸ்ட்ரால்: தினமும் காலையில் சிறிய அளவில் இஞ்சி சாறில் தயாரிக்கப்பட்ட பானத்தை அருந்தி வந்தால், கொலஸ்ட்ரால் அளவு கட்டுக்குள் இருக்கும். இதய நோய் அபாயமும் அதிகரிக்கும் கெட்ட கொலஸ்ட்ராலை எரிக்கும் ஆற்றல் கொண்டது இஞ்சி.
செரிமானம்: இஞ்சி சாறு செரிமான நொதிகளை அதிகரிக்க உதவுகிறது. இதன் காரணமாக உணவு செரிமானம் எளிதாகிறது. இதனால் செரிமான பிரச்சனைகள் ஏற்படாமல் தடுக்கலாம். மேலும், உடல் அத்தியாவசிய ஊட்டச்சத்துக்களை எளிதில் உறிஞ்சிவிடும்.
நோய் எதிர்ப்பு சக்தி: இஞ்சியில் அதிக அளவு ஆன்டிஆக்ஸிடன்ட்கள் இருப்பதால் நோய் எதிர்ப்பு சக்தியை வலுப்படுத்துகிறது. உடலில் ஏற்படும் எந்த வகையான தொற்றுநோயையும் தடுப்பது எளிதாகிறது. எனவே, தினமும் காலையில் இஞ்சி பானத்தை குடிப்பது நன்மை பயக்கும்.
இரத்த சர்க்கரை: இஞ்சி இரத்த சர்க்கரையை சீராக்க உதவுகிறது. இஞ்சி கிளைசெமிக் குறியீடு குறைவாக கொண்ட உணவு என்பதால், சுகர் லெவலை கட்டுப்படுத்த உதவுகிறது. கூடுதலாக, இது வகை 2 நீரிழிவு நோயுடன் இதய நோய் அபாயத்தையும் குறைக்கிறது.
உடல் பருமன்: தினமும் இஞ்சி ஷாட்களுடன் அன்றைய தினத்தை ஆரம்பித்தால் உடல் எடை குறையும். இது கலோரிகளை எரிப்பது மட்டுமின்றி வளர்சிதை மாற்றத்தையும் அதிகரிப்பதால் அதிக கலோரிகளை எரிக்கலாம். உடலில் ஏற்படும் எந்த வித வீக்கத்தையும் குறைக்கிறது.
இஞ்சி ஜூஸ் தயாரிக்கும் முறை: இஞ்சி ஜூஸ் தயாரிக்க, இரண்டு மூன்று துண்டுகள் இஞ்சியை தட்டி, சாற்றை வடிகட்டவும். இப்போது அதில் அரை ஸ்பூன் எலுமிச்சை சாறு சேர்க்கவும். சுவைக்காக அரை தேக்கரண்டி தேனையும் சேர்க்கலாம்.
பொறுப்பு துறப்பு: இங்கே கொடுக்கப்பட்டுள்ள தகவல்கள் வீட்டு வைத்தியம் மற்றும் பொதுவான தகவல்களை அடிப்படையாகக் கொண்டவை. இவற்றை பின்பற்றுவதற்கு முன் கண்டிப்பாக மருத்துவ ஆலோசனையைப் பெற வேண்டும். ZEE MEDIA இந்த தகவல்களுக்கு பொறுப்பேற்காது.