மூட்டு வலி முதல் இதய நோய் வரை... புளியின் வியக்க வைக்கும் மருத்துவ குணங்கள்!
சாம்பார் முதல் பல்வேறு தென்னிந்திய உணவுகளை தயாரிப்பதில் புளி பெரும்பாலும் பயன்படுத்தப்படுகிறது. இது சட்னி மற்றும் கறி வகைகள் சமைக்கும் போதும் சேர்க்கப்படுகிறது. பலர் புளி தண்ணீரையும் உட்கொள்கின்றனர். அளவோடு சாப்பிட்டு புளியின் இந்த ஆரோக்கிய நன்மைகளை அனுபவிக்கவும் ஆனால் அதிகமாக உட்கொள்ள வேண்டாம்.ஏனெனில் அளவிற்கு மிஞ்சினால் அமிர்தமும் நஞ்சு.
புளிக்குள் ஒளித்திருக்கும் ஏராளமான மருத்துவ உண்மைகளைப் பற்றி பெரும்பாலானோருக்கு தெரிவதில்லை. இந்த சூப்பர்ஃபுட் பல அத்தியாவசிய ஊட்டச்சத்துக்களால் நிரம்பியுள்ளது. அவை ஒன்றுக்கு மேற்பட்ட வழிகளில் உங்கள் ஒட்டுமொத்த ஆரோக்கியத்திற்கு பயனளிக்கும்.
புளி பொட்டாசியம் மற்றும் மெக்னீசியத்தின் நல்ல மூலமாகும், இது ஆரோக்கியமான இரத்த அழுத்த அளவை பராமரிக்க உதவும். மேலும், இதில் ஃபிளாவனாய்டுகள் போன்ற பாலிஃபீனால்களும் உள்ளன, இது கொலஸ்ட்ரால் அளவைக் கட்டுப்படுத்த உதவும்.
மூட்டுவலியைப் போக்கும் ஆற்றல் புளிக்கு உண்டு என்பது எத்தனை பல பேருக்கு தெரிவதில்லை. புளி எலும்புகள் தேய்மானத்தைக் குறைக்கும் தன்மையுடையது. அதனால், எலும்புகளின் தேய்வால் உண்டாகும் மூட்டுவலி விரைவிலேயே கட்டுக்குள் வரும்.
புளி குடல் மற்றும் செரிமானத்தின் செயல்பாட்டை சீராக்கும். செரிமான அமைப்பினை சீராக்கி ஜீரண உறுப்புகளை வலுப்படுத்தும் ஒரு டானிக் புளி. உடலிலும் குடலிலும் உள்ள நச்சுக்களை நீக்கும் நீக்கியாக செயல்படுகிறது என்று ஊட்டச்சத்து நிபுணர்கள் கூறுகின்றனர்.
வைட்டமின் சி, ஆக்ஸிஜனேற்றிகள், ஃபிளாவனாய்டுகள், கரோட்டின்கள் மற்றும் பிற ஊட்டச்சத்துக்கள் நிறைந்த புளி உங்கள் நோயெதிர்ப்பு மண்டலத்தின் செயல்பாட்டை மேம்படுத்தும் பல பண்புகளை புளி கொண்டுள்ளது.
புளியில் இருக்கும் பிரத்யேகமான ஒரு கலவை பூஞ்சைகளை அழிக்கும் திறனை கொண்டுள்ளது. பூஞ்சை காளான் தொற்று பாதிப்பை எதிர்க்கும் பண்புகள் நிறைந்தது புளி.
பொறுப்பு துறப்பு: இங்கே கொடுக்கப்பட்டுள்ள தகவல்கள் வீட்டு வைத்தியம் மற்றும் பொதுவான தகவல்களை அடிப்படையாகக் கொண்டவை. இவற்றை பின்பற்றுவதற்கு முன் கண்டிப்பாக மருத்துவ ஆலோசனையைப் பெற வேண்டும். ZEE MEDIA இந்த தகவல்களுக்கு பொறுப்பேற்காது.)