சாப்பிடும் போது கொத்துமல்லியை தூக்கி எறிவீங்களா... இந்த செய்தி உங்களுக்குத் தான்..!
கொத்தமல்லி உணவின் சுவையை அதிகரிப்பது மட்டுமின்றி, அதன் தோற்றத்தையும் சிறப்பானதாக்குகிறது. பச்சை கொத்தமல்லியில் வைட்டமின் ஏ, பி, சி, கே, கால்சியம், பாஸ்பரஸ், பொட்டாசியம், சோடியம் மற்றும் மெக்னீசியம் போன்ற சத்துக்கள் உள்ளன. இந்த சத்துக்கள் நம் உடலில் உள்ள நச்சுக்களை நீக்கி, நம்மை ஆரோக்கியமாக வைத்துக் கொள்ள உதவுகிறது
கல்லீரல் தொடர்பான பிரச்சனைகளுக்கு கொத்தமல்லி மிகவும் பயனுள்ளதாக கருதப்படுகிறது. கொத்தமல்லி இலைகளில் ஏராளமான ஆல்கலாய்டுகள் மற்றும் ஃபிளாவனாய்டுகள் உள்ளன. இந்த கூறுகள் பித்த கோளாறுகள் மற்றும் மஞ்சள் காமாலை போன்ற கல்லீரல் நோய்களை குணப்படுத்த உதவுகிறது. நச்சுக்களை நீக்கி ஆரோக்கியமாக வைக்கிறது.
கொத்தமல்லியை உட்கொள்வதன் மூலம், செரிமான அமைப்பு கோளாறுகள் மற்றும் குடல் நோய்களிலிருந்து நிவாரணம் பெறலாம். இது உங்கள் வயிற்றைப் சுத்தமாக வைத்திருப்பதுடன், மந்த நிலையை போக்கி, பசியையும் மேம்படுத்துகிறது.
கொத்தமல்லியில் ஆன்டிஆக்ஸிடன்ட்கள் உள்ளன. அவை ஃப்ரீ ரேடிக்கல்களால் ஏற்படும் செல்லுலார் சேதத்தைத் தடுக்கின்றன. கொத்தமல்லியை தொடர்ந்து சாப்பிட்டு வந்தால் உடலில் நோய் எதிர்ப்பு சக்தி அதிகரிக்கும்.
கொத்தமல்லியை உட்கொள்வதன் மூலம், உடலில் இருந்து தேவையற்ற கூடுதல் சோடியம் சிறுநீர் மூலம் வெளியேற்றப்படுகிறது. இதன் காரணமாக உடல் உள்ளிருந்து சுத்தப்படுத்தப்படுகிறது. இதன் நுகர்வு கெட்ட கொலஸ்ட்ரால் மற்றும் இரத்த அழுத்தத்தைக் கட்டுப்படுத்தவும் உதவுகிறது.
உணவில் கொத்தமல்லியைப் பயன்படுத்துவதன் மூலம், நீரிழிவை கட்டுப்படுத்த தேவையான நொதிகள் சுறுசுறுப்பாக செயல்படுகின்றன. இது உடலில் இரத்த சர்க்கரையை கட்டுப்படுத்த உதவுகிறது. இதன் மூலம், நீரிழிவு உடலில் கட்டுப்பாட்டில் இருக்கும்.
பொறுப்பு துறப்பு: இங்கே கொடுக்கப்பட்டுள்ள தகவல்கள் வீட்டு வைத்தியம் மற்றும் பொதுவான தகவல்களை அடிப்படையாகக் கொண்டவை. இவற்றை பின்பற்றுவதற்கு முன் கண்டிப்பாக மருத்துவ ஆலோசனையைப் பெற வேண்டும். ZEE MEDIA இந்த தகவல்களுக்கு பொறுப்பேற்காது.