வங்கிகளை விட அதிக வட்டி, முழுமையான பாதுகாப்பு: அசத்தும் தபால் நிலைய FD திட்டம்
பாதுகாப்பான முறையில் பணத்தை முதலீடு செய்ய, நீங்கள் தபால் அலுவலக நிலையான வைப்புகளில் முதலீடு செய்யலாம். இதில், வட்டி உட்பட பல வசதிகளையும் பெறுவீர்கள். இந்த திட்டத்தில், வாடிக்கையாளர்களுக்கு லாபத்துடன் அரசு உத்தரவாதமும் கிடைக்கும். காலாண்டு அடிப்படையில் வட்டி செலுத்த வசதி உள்ளது.
தபால் அலுவலகத்தில் உங்கள் பெயரில் FD போடுவது மிகவும் எளிதாகும். நீங்கள் FD இல் முதலீடு செய்ய விரும்பினால், தபால் அலுவலகத்தின் அதிகாரப்பூர்வ வலைத்தளத்திற்கு சென்று அதைப் பற்றிய முழுமையான தகவலைப் பெறலாம். தபால் நிலையத்தில் 1, 2, 3 மற்றும் 5 ஆண்டுகளுக்கு நிலையான வைப்புத்தொகையை போடலாம்.
இதில் உங்கள் பணம் முற்றிலும் பாதுகாப்பாக இருக்கும். இதில், நீங்கள் ஆன்லைனிலும் ஆஃப்லைனிலும் எஃப்.டி. போடலாம். மேலும், இதில் ஒருவர் ஒரு FD-க்கு மேலான FD-களையும் போடலாம். FD கணக்குகளை இதில் இணைக்கவும் முடியும். 5 வருடங்களுக்கு FD போட்டால் ITR- இல் வரி விலக்கு கிடைக்கும். இது தவிர, நீங்கள் ஒரு திட்டத்தை மற்றொரு திட்டத்தில் எளிதாக மாற்றலாம்.
தபால் அலுவலகத்தில் எஃப்.டி கணக்கை ஓப்பன் செய்வது மிகவும் எளிது. காசோலை அல்லது பணத்தை செலுத்தி எஃப்.டி கணக்கை ஓப்பன் செய்யலாம். குறைந்தபட்சம் 1000 ரூபாயை முதலீடு செய்து நீங்கள் கணக்கைத் திறக்க முடியும். அதிகபட்ச தொகைக்கு இதில் வரம்பு இல்லை.
நீங்கள் 7 நாட்கள் முதல் ஒரு வருடம் வரையிலான கால அளவுக்கு எஃப்.டி போட்டால், உங்களுக்கு 5.50 சதவீதம் வட்டி கிடைக்கும். 1 வருடம் 1 நாள் முதல் 3 ஆண்டுகள் வரையிலான எஃப்.டி-க்கும் அதே வட்டி கிடைக்கும். இது தவிர, 3 வருடங்கள் 1 நாள் முதல் 5 ஆண்டுகள் வரையிலான எஃப்.டி -க்களுக்கு 6.70 சதவிகிதம் வட்டி கிடைக்கும்.