இடுப்பை சுருக்கி அழகாக்கும் இஞ்சி! சுக்கு நீர் கொடுக்கும் அற்புத ஆரோக்கிய பலன்கள்
இஞ்சி தண்ணீரில் கிட்டத்தட்ட கலோரியே இல்லை என்று சொல்லலாம். நீர் சத்து கொடுக்கிறது. எடை குறைக்க வேண்டும் என்று விரும்புபவர்களுக்கு கை கொடுக்கிறது இஞ்சி.
இரத்த சர்க்கரையை குறைக்கிறது. தினமும் உங்கள் உணவில் இஞ்சி தண்ணீரை சேர்த்துக் கொள்வது இரத்தத்தில் சர்க்கரை அதிகரிப்பதற்கான வாய்ப்புகளை குறைக்கும். வகை 2 நீரிழிவு நோயாளிகளுக்கு இரத்த சர்க்கரை அளவை கட்டுப்படுத்த இஞ்சித் தண்ணீர் உதவுகிறது.
இஞ்சி நீரில் ஆன்டி-ஆக்ஸிடன்ட் ஜிஞ்சரோல் நிறைந்துள்ளது, இது ஃப்ரீ ரேடிக்கல்களை எதிர்த்துப் போராடி, சீரான தொனியையும், பளபளப்பான சருமத்தையும் தரும். ஆரோக்கியமான மற்றும் பளபளப்பான சருமத்தை வழங்கும் இஞ்சியின் தண்ணீர், சருமம் விரைவில் தளர்வதை கட்டுப்படுத்துகிறது. அதன் அழற்சி எதிர்ப்பு பண்புகள் அனைத்து வகையான தொற்றுநோய்களையும் எதிர்த்துபோராடும்.
ஒரு கிளாஸ் இஞ்சி தண்ணீருடன் உங்கள் நாளைத் தொடங்குவது ஆரோக்கியமான பழக்கம். இந்த பழக்கத்தை வழக்கமாக்கிக் கொள்ள முடியாவிட்டால், ஏதாவது ஒரு நேரத்திலாவது சுக்கு அல்லது இஞ்சி தண்ணீரை குடிக்கவும். இது உடலில் நீர்ச்சத்து குறையாமல் இருக்க உதவி செய்யும்
கொலஸ்ட்ராலைக் குறைக்க இஞ்சிக்கு மிஞ்சியது எதுவும் இல்லை. இதய நோய் வருவதற்கான வாய்ப்புகளைக் இஞ்சி மட்டுமல்ல, அதன் அக்கா சுக்கும் தான். தமனிகளில் கொழுப்பு படிவதை கட்டுப்படுத்தும் இஞ்சியும் சுக்கும் கொலஸ்ட்ரால் தொடர்பான நோய்களின் அபாயத்தை கணிசமாகக் குறைக்க உதவுகின்றன