கோலாகலமாக கொண்டாடும் விநாயகர் சதுர்த்தியே உங்களை கோடீஸ்வரராக்கும்! எப்படி? இப்படித்தான்...

Sat, 07 Sep 2024-10:19 pm,

ஆவணி மாத வளர்பிறை சதுர்த்தியன்று தொடங்கும் கணபதி உற்சவம், 10வது நாளான அனந்த சதுர்தசி நாளுடன் முடிவுக்கு வரும். இந்த பத்து நாட்களில் விநாயகரை வழிபட்டால் விக்னங்கள் அனைத்தும் தீரும் என்பது நம்பிக்கை. அத்துடன், லட்சுமி அன்னையை பூஜித்தால் பணமழை வீட்டில் பொழியும் என்று சொல்லும் அளவுக்கு பண வரத்து இருக்கும்

பிள்ளையாருக்கு மிகவும் பிடித்த அருகம்புல் கொண்டு செய்யும் பூஜைகள் கணபதியின் மனதை மயக்கி, பண வரத்தைக் கொண்டு வந்து சேர்க்கும்

கணபதியை அலங்காரம் செய்து அழகு பார்த்தால் ஆபரணங்கள் வந்து சேரும்

தின்பண்டங்களில் கொள்ளை பிரியம் கொண்ட பாலகணபதிக்கு கொழுக்கட்டை படைத்து வழிபட்டால் வேண்டிய வரம் கிடைக்கும்

மஞ்சளில் இருந்து தோன்றிய பிள்ளையாரை, மஞ்சள் பிள்ளையார் பிடித்து வணங்குவது சிறப்பானது

பிள்ளையார் சதுர்த்தி காலத்தில், வீட்டிற்கு சங்கு வாங்கினால் அது பல நன்மைகளைக் கொண்டு வந்து சேர்க்கும்

விநாயகர் சதுர்த்தியில் செய்யும் தானங்கள், மிகவும் சிறப்பு வாய்ந்தவை. பிறந்ததன் பலனை உங்களுக்குக் கொடுக்கும் தானங்களை விநாயகர் சதுர்த்தி கொண்டாட்டங்களின் போது செய்வது சிறந்தது

விநாயகர் சதுர்த்தியின் போது விநாயகருக்கு விருப்பமான அருகம்புல்லை படைத்து சாப விமோசனம் பெற்றார் நந்தி என்பது புராணம் சொல்லும் கதை. அதேபோல, அருகம்புல் அர்ச்சனை செய்தால் அனைத்து வளங்களும் உங்களை நாடி வந்து சேரும்

 

பொறுப்புத்துறப்பு: பாரம்பரிய நம்பிக்கைகள், தொன்றுதொட்டு தொடரும் நம்பிக்கைகள், பழக்கவழக்கங்களின் அடிப்படையில் எழுதப்பட்ட இந்தக் கட்டுரையின் உள்ளடகத்திற்கு ஜீ மீடியா பொறுப்பேற்காது

ZEENEWS TRENDING STORIES

By continuing to use the site, you agree to the use of cookies. You can find out more by Tapping this link