குரு பெயர்ச்சி மே 1: இந்த ராசிகளுக்கு கோடீஸ்வர பண ராஜாதி ராஜ யோகம்

Sat, 20 Apr 2024-8:35 am,

மேஷம் - குரு பெயர்ச்சியால் ஏற்படும் ராசி மாற்றம் மேஷ ராசியினருக்கு சுப பலனைத் தரும், நிதி ஆதாயம் மற்றும் முன்னேற்றத்திற்கான வாய்ப்புகள் அதிகரிக்கும், சுப காரியங்களுக்கான செலவுகள் ஏற்படலாம், மிகவும் பிரபலமான நபர்களுடன் தொடர்பு அதிகரிக்கும், இதனால் புதிய லாபகரமான வழிகள் மற்றும் திட்டங்கள் உருவாகும்.

 

ரிஷபம் - ரிஷப ராசிக்காரர்கள் குரு பெயர்ச்சியால் அதிக பலன்களைப் பெறப் போகிறார்கள். இந்த காலகட்டத்தில் மீடியா மற்றும் கிராஃபிக்ஸ் பணி செய்பவர்கள் பயனடைவார்கள். வருமானம் கூடும். திருமண வாழ்வில் மகிழ்ச்சி உண்டாகும். இருப்பினும் உடல் ஆரோக்கியத்தில் கவனமாக இருக்க வேண்டும். குடும்பப் பொறுப்புகளை சுமுகமாக நிறைவேற்றுவீர்கள்.

 

மிதுனம் - குரு பெயர்ச்சியால் மிதுன ராசிக்காரர்களின் நம்பிக்கை அதிகரிக்கும், ஆனால் மனதில் ஏற்ற தாழ்வுகள் இருக்கலாம். அதிக ஆர்வத்துடன் இருப்பதை தவிர்க்கவும். வியாபாரத்தில் விழிப்புடன் இருங்கள். உத்தியோகத்தில் மாற்றம் ஏற்பட வாய்ப்புகள் உள்ளது. முன்னேற்றத்திற்கான வாய்ப்புகள் அதிகரிக்கலாம்.

 

சிம்மம் - சிம்ம ராசிக்காரர்களுக்கு குரு ராசி மாற்றம் அற்புதமாக அமையும். இந்த நேரத்தில், உங்கள் இனிமையான பேச்சின் மூலம் முன்னேற்றம் அடைவீர்கள். உத்தியோகத்தில் வளர்ச்சி இருக்கும், சம்பளம் மற்றும் பதவி உயர்வு கூடும்.

 

துலாம் - துலாம் ராசிக்காரர்களுக்கு குரு பெயர்ச்சியால் நல்ல பலன் கிடைக்கும். வேலையில் வெற்றி பெறுவீர்கள். பதவி உயர்வு மற்றும் இடமாற்றம் கிடைக்கலாம். அதிர்ஷ்டம் உங்களுக்கு சாதகமாக இருக்கும். வீட்டிற்கு புதிய விருந்தினர் வருகை தரலாம்.

 

மீனம் - மீன ராசிக்காரர்களுக்கு குரு பெயர்ச்சியால் பல வழிகளில் இருந்து நன்மை தரும். தொழிலில் உற்சாகமாக இருப்பீர்கள். வியாபாரத்திற்கு இந்த வருடம் சிறப்பாக இருக்கும். ஆரோக்கியமும் நன்றாக இருக்கும். காதல் திருமணம் செய்துக் கொள்ளலாம்.

பொறுப்பு துறப்பு: இங்கே கொடுக்கப்பட்டுள்ள தகவல்கள் பொதுவான நம்பிக்கைகள் மற்றும் தகவல்களின் அடிப்படையில் அமைந்துள்ளன. ஜீ மீடியா இந்த தகவல்களை உறுதிப்படுத்தவில்லை.

ZEENEWS TRENDING STORIES

By continuing to use the site, you agree to the use of cookies. You can find out more by Tapping this link