சதயத்தில் சனி பகவான்: இந்த ராசிகளுக்கு அட்டகாசமான நேரம், தொட்டதெல்லாம் துலங்கும்
சனி பகவானின் நட்சத்திர பெயர்ச்சி அனைத்து ராசிகளிலும் தாக்கத்தை ஏற்படுத்தும். எனினும், சில ராசிகளுக்கு இதனால் அபரிமிதமான பலன்கள் கிடைக்கும். அந்த அதிர்ஷ்டக்கார ராசிகளை பற்றி தெரிந்துகொள்ளலாம்.
மேஷ ராசிக்காரர்களுக்கு வரும் 6 மாதங்கள் மிகவும் அதிர்ஷ்டமானதாக இருக்கும். இந்த நேரத்தில், தொழில் தொடங்க விரும்பும் மேஷ ராசிக்காரர்களுக்கு மிகவும் சாதகமான சூழல் அமையும். அதே சமயம், வேலை செய்பவர்களுக்கும் இந்த நேரம் மிகவும் நன்றாக இருக்கும். இந்த நேரத்தில் உத்தியோகத்தில் பதவியும் கௌரவமும் கிடைக்கும்.
மிதுன ராசிக்காரர்களுக்கு சனியின் சதய நட்சத்திரப் பிரவேசம் பல நன்மைகளைத் தரும். இவர்கள் பல பிரச்சனைகளில் இருந்து விடுபடுவார்கள். வெளிநாடு செல்லும் வாய்ப்பு கிடைக்கும். தொழிலில் முன்னேற்றம் ஏற்படும்.
சிம்ம ராசிக்காரர்களுக்கு சனிபகவான் சதய நட்சத்திரத்தில் நுழைவது அக்டோபர் மாதம் வரை அவர்களின் தொழிலில் மகத்தான பலன்களைத் தரும். பெரிய வெற்றியையும் அடைய வாய்ப்புகள் கிடைக்கும். விரும்பிய இடத்திற்கு மாற்றம் பெறுவீர்கள். புதிய வேலைக்கான தேடல் முடியும். வருமானம் அதிகரிக்கும்.
துலாம் ராசிக்காரர்களுக்கு அக்டோபர் 17 ஆம் தேதி வரை சனி பகவான் பல சுப பலன்களைத் தருவார். உத்தியோகத்தில் விரும்பிய பதவி உயர்வு கிடைக்கும். வருமானம் அதிகரிக்கும். வியாபாரம் செய்பவர்களுக்கு பண வரவு நன்றாக இருக்கும். மாணவர்களும் தங்கள் கடின உழைப்பின் முழு பலனைப் பெறுவார்கள்.
சனிபகவான் சதய நட்சத்திரத்தில் நுழைவது தனுசு ராசிக்காரர்களுக்கு வெற்றியைத் தரும். இந்த நேரத்தில் பழைய பிரச்சனைகள் அனைத்தும் நீங்கும். இந்த காலத்தில் புதிய வேலை தேடுபவர்களின் விருப்பம் நிறைவேறும். அடுத்த 6 மாதங்கள் தொழிலதிபர்களுக்கும் மிகவும் சாதகமாக இருக்கும்.
இங்கே கொடுக்கப்பட்டுள்ள தகவல்கள் பொதுவான நம்பிக்கைகள் மற்றும் தகவல்களின் அடிப்படையில் ஆமிந்துள்ளன. ஜீ மீடியா இந்த தகவல்களை உறுதிப்படுத்தவில்லை.) உடனுக்குடன் செய்திகளை தெரிந்துக் கொள்ளவும், உங்கள் கருத்துக்களை பகிர்ந்துக் கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களை பின்தொடருங்கள்.