இதையும் விடாத அம்பானி... ஜியா சினிமாவின் அடுத்தடுத்த இலவசங்கள்!

Wed, 14 Jun 2023-9:35 pm,

Jio Cinema IND vs WI: ஜியோ சினிமாவில் ஆங்கிலம், இந்தி, போஜ்புரி, பஞ்சாபி, தமிழ், தெலுங்கு மற்றும் கன்னடம் உள்ளிட்ட ஏழு மொழிகளில் ஒரு மாத காலம் நடக்க உள்ள இந்திய - மேற்கிந்திய தீவுகள் அணிகளின் போட்டி ஒளிபரப்ப உள்ளது.

இந்திய அணி, மேற்கிந்திய தீவுகளுக்கு வரும் ஜூலை 12ஆம் தேதி சுற்றுப்பயணம் மேற்கொள்கிறது. டொமினிகாவில் உள்ள வின்ட்சர் பார்க் ஜூலை 12-16 முதல் டெஸ்ட் போட்டியும், ஜூலை 20-24 வரை இரண்டாவது டெஸ்ட் போட்டியும் நடைபெறுகிறது. இரண்டாவது டெஸ்ட் போட்டி இந்தியா மற்றும் மேற்கிந்திய தீவுகள் அணிகளுக்கு இடையிலான 100வது டெஸ்ட் போட்டியாகும்.

 

டெஸ்ட் தொடரைத் தொடர்ந்து மூன்று ஆட்டங்கள் கொண்ட ஒருநாள் தொடர், ஜூலை 27, 29 மற்றும் ஆகஸ்ட் 1ஆம் தேதி நடைபெறுகிறது. 5 போட்டிகள் கொண்ட டி20 தொடரும் இதையடுத்து நடைபெறுகிறது. ஆகஸ்ட் 3, 6, 8, 12, 13 ஆகிய தேதிகளில் முறையே இப்போட்டிகள் நடைபெற உள்ளன. 

 

ஜியோ சினிமா, ஐபிஎல் 2023 தொடரை இலவசமாக ஒளிப்பரப்பியது. 2023ஆம் ஆண்டு முதல் 2027ஆம் ஆண்டு வரையிலான ஐந்தாண்டு டிஜிட்டல் ஸ்ட்ரீமிங் உரிமையை ஹாட்ஸ்டாரிடம் இருந்து ஜியோ சினிமா கைப்பற்றியது. 

ஜியா சினிமா ஐபிஎல் உரிமையை ரூ. 951 கோடி கொடுத்து வாங்கியது. மேலும், ஐபிஎல் தொடரை இலவசமாக ஒளிபரப்பியதால் அதிக பார்வையாளர்களை அது பெற்றது. இது ஹாட்ஸ்டாருக்கு மேலும் பின்னடைவை உண்டாக்கியது. 

ஜியோ சினிமா கணக்கீட்டின்படி, சென்னை சூப்பர் கிங்ஸ் மற்றும் குஜராத் டைட்டன்ஸ் அணிகளுக்கு இடையேயான ஐபிஎல் இறுதி போட்டியை ஒரே நேரத்தில் 3.21 கோடி பார்வையாளர்கள் பார்த்துள்ளனர்.

ஜியோ சினிமாவின் இந்த அசூர வளர்ச்சியை அடுத்து, அதற்கு போட்டியாக ஹாட்ஸ்டாரும் ஒரு பெரும் அறிவிப்பை வெளியிட்டது. இந்தாண்டுகளில் அடுத்தடுத்து நடத்தப்படும் ஆசிய கோப்பை மற்றும் ஐசிசி ஆண்கள் கிரிக்கெட் உலகக் கோப்பை போன்ற கிரிக்கெட் தொடர்களை இலவசமாக ஒளிப்பரப்ப டிஸ்னி+ ஹாட்ஸ்டார் முடிவெடுத்தது.

ZEENEWS TRENDING STORIES

By continuing to use the site, you agree to the use of cookies. You can find out more by Tapping this link