ஆண்களே உங்களுக்கு குட்நியூஸ்! அடிக்கடி உடலுறவு வைத்தால் ஆயுள் கூடும்
ஆம், உடலுறவு அடிக்கடி வைத்துக் கொண்டால் ஆண்களின் ஆயுள் கூடும். இன்றைய பரபரப்பான உலகில் மெஷின்களைப் போலவே இளைஞர்கள் உழைத்துக் கொண்டிருக்கிறார்கள். மாதத்தில் ஏதாவது ஒருநாளை தான் அவர்கள் தங்களுக்கு ரிலாக்ஷூக்கு உரிய நாள் என்று நிர்ணயித்து பொழுதுபோக்குகளுக்கு செலவிடுகிறார்கள்.
ஆனால், உண்மையில் இது பலனளிக்குமா? என்றால் கேள்விக் குறிதான். ஏனென்றால் மன மகிழ்ச்சி, ஆரோக்கியம் என்பது தினசரி வாழ்வியலோடு தொடர்புடையது. ஏதோ ஒருநாளில் எல்லாம் உங்களின் ஆரோக்கிய பிரச்சனைகளை தீர்த்துவிட முடியாது. மன அழுத்தம் நாட்பட்ட கண்ணுக்கு தெரியாத மிகப்பெரிய நோய். இதுகுறித்து பெரிதும் யாரும் கவனம் செலுத்துவதில்லை.
உங்களின் ஆரோக்கியத்தை பல விதங்களில் கெடுக்கும் மன அழுத்ததுக்கு மிகச்சிறந்த தீர்வுகளில் ஒன்று உடலுறவு. அதிக டென்ஷனில் இருக்கும் ஆண்கள் அடிக்கடி உடலுறவு கொண்டால், மன அழுத்தம் உள்ளிட்ட சிக்கல்கள் அவர்களுக்கு இருக்காது. புத்துணர்ச்சியோடு இருப்பதுடன் தெளிவுடன் இருக்கலாம். எந்த முடிவையும் துல்லியமாக சரியான நேரத்தில் எடுக்கக்கூடிய ஆற்றல் அவர்களுக்கு இருக்கும்.
உடலுறவு கொள்ளும்போது மகிழ்ச்சியான ஹார்மோன்கள் அதிகளவில் தூண்டப்படும். இது மன அழுத்தங்களை போக்கி உங்கள் மனநிலையை மகிழ்ச்சியில் ஆழ்த்தும். அடிக்கடி இந்த ஹார்மோன்கள் வெளியாகும்போது ஆரோக்கியம் மேம்படும். காதல் ஹார்மோன் அல்லது மகிழ்ச்சி ஹார்மோன் எனப்படும் ஆக்ஸிடாஸின் சுரப்பு உடலுக்கு அவசியம்.
இயற்கை வலி நிவாரணியான எண்டோர்பின் ஹார்மோன் உடலுறவு கொள்ளும்போது சுரக்கும். இந்த ஹார்மோன் கவலை, மனச்சோர்வு ஆகியவற்றை குறைக்க உதவுகிறது. இதன் மூலம் நமது ஆயுளும் அதிகரிக்கும் என்று மருத்துவர்கள் தெரிவிக்கின்றர்.
உடலுறவு மூலம் வெளிப்படும் ஹார்மோன்கள் நோய் எதிர்ப்புச் சக்தியை அதிகரிக்க செய்யும். இதன்மூலம் இதய ஆரோக்கியத்தையும் மேம்படும் என்பதை ஆய்வுகள் பல நிரூபித்துள்ளன. குறைந்தபட்சம் வாரத்துக்கு இரண்டு முறையாவது உடலுறவு வைத்துக் கொள்ள வேண்டும். இம்யூனோகுளோபுலின் ஏ சுரப்பும் அதிகரிக்கும், இது ஒரு ஆன்டிபாடி.
மன அழுத்தம் குறையும்போது ரத்த அழுத்தமும் குறையும். இந்த இரண்டும் சீராக இருக்கும்போது இதய நோய் பிரச்சனை ஏற்பட வாய்ப்பில்லை. மேலும், உடலுறவு கொள்ளும்போது டெஸ்டோஸ்டிரோன் சுரப்பு அதிகரிக்கிறது. டெஸ்டோஸ்டிரோன் சுரப்பு அதிகரிக்கும்போது தான் எலும்பு தசைகள் எல்லாம் வலிமையடையும். எலும்பு அடர்த்தி அதிகரிக்கும்.
உடலுறவு குறித்து பொதுப்புத்தியில் தவறாக நினைத்துக் கொண்டிருக்காமல் அடிக்கடி உடலுறவு வைத்துக் கொண்டால் ஆரோக்கியம் மேம்பட்டு ஆயுளும் கூடும் என்பதால் தம்பதிகள், குறிப்பாக ஆண்கள் இந்த விஷயத்தில் அதிக அக்கறை எடுத்துக் கொள்வது உங்களின் உடல் நலனுக்கு நல்லது.